Bigil-Kaithi Release Updates: பிகில் சாதிக்குமா? விஜய் படத்துக்கு தொடரும் சவால்கள்

Thalapathy Vijay - Karthi: பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய பிகிலும், ஹீரோயினே இல்லாத கைதியும் ஒன்றாக திரைக்கு வருகின்றன.

By: Oct 23, 2019, 7:16:22 PM

Bigil-Kaithi Release Live Updates: ’தெறி’, ‘மெர்சல்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் – இயக்குநர் அட்லீ மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படம் ‘பிகில்’. இதனை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) ரிலீஸாகிறது.

விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படம் ‘மாநகரம்’. இதன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தியை வைத்து ‘கைதி’ படத்தை இயக்கியுள்ளார். ஒரு திரைப்படத்திற்கு முக்கிய அம்சங்களாக கருதப்படும் ஹீரோயின், பாடல்கள் என எதுவுமே ‘கைதி’யில் இல்லை. முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ள கைதி படமும் தீபாவளி விருந்தாக வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.

Live Blog
Thalapathy Vijay's Bigil, Karthi's Kaithi Release Live Updates: தளபதி விஜய்யின் ‘பிகில்’, கார்த்தியின் ‘கைதி’ ஆகியப் படங்களின் ரிலீஸ் குறித்த லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள். 
19:16 (IST)23 Oct 2019
பிகில் சாதிக்குமா? விஜய் படத்துக்கு தொடரும் சவால்கள்

தமிழக அரசு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதியளிக்கவில்லை. அனுமதியளிக்காத நிலையில், எந்தத் திரையரங்காவது அதிகாலை காட்சிகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்" மாநில அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்கள்.  பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது தமிழக அரசு குறித்து படத்தின் கதாநாயகன் விஜய் வெளியிட்ட கருத்துகளின் காரணமாகவே மாநில அரசு பாராமுகமாக நடந்துகொள்வதாக சொல்லப்படுகிறது. இருந்தபோதும், பிகில் தரப்பிலிருந்து தொடர்ந்து அரசுடன் பேச்சு வார்த்தைகளுக்கான முயற்சிகள் நடந்துவருகின்றன. ஏதோ ஒரு வகையில் சமரசம் எட்டப்பட்டு, காலைக் காட்சிகள் நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

18:53 (IST)23 Oct 2019
பிகிலாக இருந்தாலும், திகிலாக இருந்தாலும் சட்டம் ஒன்று தான்

பிகிலாக இருந்தாலும், திகிலாக இருந்தாலும் சட்டம் ஒன்று தான் என்று - அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

17:22 (IST)23 Oct 2019
‘பிகில்’ படத்தை ஏன் பார்க்க வேண்டும்?

கில்லிக்கு பிறகு ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான படத்தில் விஜய் நடித்திருக்கிறார். நீண்ட காலத்திற்குப் பிறகு மைதானத்தில் மனநிலையை செலுத்தி இருக்கிறார் விஜய்.

பிகில் படத்தில் மூன்று பார்த்திரங்களில் தோன்றுகிறார். மூன்று முகங்களை வடிவமைப்பதில் அட்லீ எப்படி கைதேர்ந்திருக்கிறார் என கவனிக்க விரும்புகிறவர்கள் இந்தப் படத்தை பார்த்தே ஆக வேண்டும்.

வில்லு படத்திற்கு பிறகு பிகில் பக்கத்திற்கு இந்த இருவரும் வந்து சேர்ந்துள்ளனர். ஒரு லேடி சூப்பர் ஸ்டாரும் ஒரு மாஸ் சூப்பர் ஸ்டாரும் இணைந்துள்ள படம்  பிகில் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

17:14 (IST)23 Oct 2019
தீபாவளி சிறப்பு காட்சி ரத்து ஏன்? - அமைச்சர் விளக்கம்

முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள், ரூ.2000 வரை பணம் செலுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தீபாவளி சிறப்புகாட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்ப கொடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

16:24 (IST)23 Oct 2019
பிகில் சிறப்பு எமோஜியை வெளியிட்டது டுவிட்டர்…

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள பிகில் படத்தை சிறப்பிக்கும் பொருட்டு, டுவிட்டர் புதிய எமோஜியை வெளியிட்டுள்ளது .

12:52 (IST)23 Oct 2019
அதிகாலை 2.30 மணி காட்சி

அரபு நாடுகளில் பிகில் திரைப்படம் அதிகாலை 2.30 மணிக்கு வெளியாகிறது. 

12:44 (IST)23 Oct 2019
தீபாவளி சிறப்புக்காட்சி ரத்து

தீபாவளிக்கு சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது ஏன் என அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, சிறப்புக் காட்சி என அதிக கட்டணம் வசூலிப்பது தான் காரணம் என்றார்  ஜெயக்குமார். 

12:42 (IST)23 Oct 2019
என்ஜாய்மெண்டிலும் சமூக தேவைகளை பூர்த்தி செய்த விஜய் ரசிகர்கள்.

பிகில் படத்திற்கு கட்அவுட்டுகள் வைத்து கொண்டாடுவதை தவிர்த்து, நெல்லை மீனாட்சிபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட, நான்கு இடங்களில் சிசிடிவி அமைக்க, சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான, சிசிடிவி மேகராக்களை காவல்துறையினரிடம் வழங்கினர் விஜய் ரசிகர்கள். இது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 

12:35 (IST)23 Oct 2019
எல்லாமே புதுசு

கைதியில் எல்லாம் புதுமையாக இருக்கும் என  ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. 

12:21 (IST)23 Oct 2019
அமெரிக்காவில் வெளியாகும் கைதி

கைதி திரைப்படம் அமெரிகாவில் வெளியாகும் திரையரங்க விபரங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

12:06 (IST)23 Oct 2019
பிகில் சுவாரஸ்யம்

பிகில் படத்தின் போது நடந்த சுவாரஸ்யங்களை தற்போது ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்கள் ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட்

11:36 (IST)23 Oct 2019
புக்கிங் ஸ்டார்ட்

பிகில் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியிருப்பதாக, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் ட்விட்டரில் அறிவித்துள்ளது. 

11:17 (IST)23 Oct 2019
கைதி படத்துக்கு 250 தியேட்டர் போதும்

பிகில் படத்திற்கு ரசிகர்கள் நான்கு நாட்கள் சென்று படத்தைப் பார்த்தால் ஐந்தாவது நாள் அவர்கள் அனைவரும் ‘கைதி’ திரைப்படத்தை பார்க்க வந்து தான் ஆக வேண்டும். அப்போது எங்களுக்கு தேவையான வருமானம் கிடைத்துவிடும் என கைதியின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு தெரிவித்துள்ளார். 

மேலும், “ ‘கைதி’ படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று கூறுவதில் உண்மை இல்லை. எங்கள் படத்தின் பட்ஜெட்டின்படி எங்களுக்கு தேவையான வருமானம் கிடைக்க, தமிழகம் முழுவதும் ‘கைதி’ படத்திற்கு 250 தியேட்டர்கள் கிடைத்தால் போதுமானது. அந்த வகையில் எங்களுக்கு தேவையான தியேட்டர்கள் கிடைத்து விட்டது என்பதால் ‘கைதி’ திரைப்படம் வருமானத்தை பெற்று தருவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்றே நம்புகிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

11:11 (IST)23 Oct 2019
ஹாட்ரிக் தீபாவளி விருந்து

2017-மெர்சல், 2018-சர்கார், 2019-பிகில் என தொடர்ந்து மூன்று வருடங்களாக தனது ரசிகர்களுக்கு தீபாவளி விருந்துக் கொடுத்திருக்கிறார் விஜய். 

11:06 (IST)23 Oct 2019
கைதி படத்தை சட்ட விரோதமாக வெளியிட தடை

கைதி திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 1,620 சட்டவிரோத இணையதளங்களில் கைதி திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

10:41 (IST)23 Oct 2019
தெறிக்குப் பிறகு மீண்டும் பாடிய விஜய்

அட்லீயின் தெறி படத்துக்குப் பிறகு, பிகில் படத்தின் மூலம் மீண்டும் தனது குரலில் பாடியிருக்கிறார் விஜய். ’வெறித்தனம்’ என்ற அந்த பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் வீடியோ எப்படி இருக்கும் என்பதைக் காண ஆர்வமாக இருக்கிறார்கள். 

10:08 (IST)23 Oct 2019
கமல் ரசிகர்களான கைதி குழு

கைதி படத்தில் நடிகர் நரேன் நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவில் நடித்துள்ள அவர், உணர்வுகளுக்கு ஏற்றபடி போலீசாகவும், தண்டனை கொடுக்கும் விதத்தில் விருமாண்டி கமல் ஹாசன் போலவும் நடித்துள்ளாராம். இவர் மட்டுமல்ல கைதி படத்தின் இயக்குனர் லோகேஷும் கமலின் ரசிகராம். இருவரும் படத்தின் டப்பிங்கின் போது கமல் படங்களை பற்றி பேசினார்களாம்..

09:49 (IST)23 Oct 2019
வெளியீட்டிற்கு முன்பே 136.55 கோடி சம்பாதித்த பிகில்

உலகளவில் பிகில் ரூ.136.55 கோடி வரையில் வசூல் குவித்து கோலிவுட்டில் வெளியீட்டிற்கு முன்பாக அதிக வசூல் குவித்த படங்களில் இப்படம் 2 ஆவது இடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பாக ரஜினியின் கபாலி படம் ரூ.160 கோடி வரையில் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

09:41 (IST)23 Oct 2019
பிகிலுக்கு பதில் கைதி டிக்கெட் புக் செய்த ரசிகர்

விஜய் ரசிகர் ஒருவர் ஆன்லைனில் பிகில் பட டிக்கெட் புக் செய்வதற்கு பதில் தவறுதலாக கைதி படத்தின் டிக்கெட்டை புக் செய்து விட்டாராம். என்ன செய்வதென்று தெரியவில்லை என அவர் கைதி பட தயாரிப்பாளரை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டார். அதை பார்த்த எஸ்.ஆர்.பிரபு "தம்பி உனக்கு அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்ல போ" என கிண்டல் செய்துள்ளார். 

09:26 (IST)23 Oct 2019
விஜய்க்கு ஆதரவாக எஸ்.வி.சேகர்

பிகில் படத்தில் கருப்பு சட்டை, காவி கலர் வேஷ்டி, கழுத்தில் சிலுவை என வித்தியாசமாக வருகிறார் விஜய். இதே போல உடைகள் தற்போது விற்பனைக்கும் வந்திருக்கிறது. முதல் நாள் முதல் காட்சி 'பிகில்' படத்துக்குப் போகும்போது, இந்த உடையில் செல்லலாம் என்று பலரும் வாங்கி வருகிறார்கள். 

09:05 (IST)23 Oct 2019
கைதிக்கு முன்னுதாரணமான அந்த 2 படங்கள்

‘கைதி படத்தில் இடம்பெற்றுள்ள கார்த்தியின் கதாபாத்திரம் கமலின் விருமாண்டி மற்றும் ஹாலிவுட் படமான டை ஹார்ட் ஆகியவற்றை முன்னுதாரணமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இந்த இரு படங்களுக்கும் டைட்டிலில் கெளரவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கைதியின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். 

08:49 (IST)23 Oct 2019
Bigil Release: பெரிய திரையில் வெளியாகும் முதல் தமிழ் படம்!

தளபதி விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் கிட்டத்தட்ட 4200 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. ஆந்திரப்பிரதேச மாநிலம் சூலூர்பேட்டையில் வி எபிக் என்ற திரையரங்கும் க்யூப் சினிமா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100 அடி அகலத்திற்கு பரந்து விரிந்து காணப்படுவதுதான் இந்த வி எபிக் திரையரங்கின் சிறப்பம்சம். மொத்தம் 3 திரைகளை கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்ட இந்த திரையரங்கில் இதுவரை எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை. ஆகையால் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய திரையில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை பிகில் பெற்றுள்ளது.

Bigil-Kaithi Release Live Update: பிகில்’ திரைப்படம் அக்டோபர் 25-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதன் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையையும் பொருட்படுத்தாமல், பிகில் படத்துக்கு முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் வாக்குவதற்காக மிக நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள் ரசிகர்கள்.

பிகிலுக்கு சற்றும் குறைவில்லாத எதிர்பார்ப்பு கைதி படத்திற்கும் உள்ளது. ஏனெனில் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முந்தைய படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதோடு விஜய்யின் அடுத்தப் படமான ‘தளபதி 64’-ஐயும் லோகேஷே இயக்குகிறார். ’10 வருஷமா நா ஜெயில்ல இருந்தது மட்டும் தான தெரியும். அதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தனு தெரியாதுல’ என்று ட்ரைலரில் கார்த்தி பேசும் வசனம், கைதி படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கிறது.

Web Title:Bigil kaithi release live updates thalapathy vijay karthi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X