தீபாவளிக்கு விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகின்றன. விஜய் படம் ரிலீஸ் என்றால், அது எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பிகில் படமும் அப்படி ஒரு எதிர்பார்ப்போடு, மெகா வெல்கமோடு ரிலீசாக உள்ளது.
ஒவ்வொரு ஏரியாவிலும் பிகில் வியாபாரம் எதிர்பார்த்தது போலவே சிறப்பாகவே அமைந்திருக்கிறது. இன்னும் சொல்லப்பானால், படம் ரிலீசாவதற்கு முன்பே பிகில் தயாரிப்பாளர்கள் 20 சதவிகிதம் வரை லாபம் பார்த்துவிட்டதாகவே கூறப்படுகிறது. இத்தனைக்கும் படத்தின் பட்ஜெட், இயக்குனர் சொன்னதை விட, 50 கோடிக்கும் அதிகமாக சென்ற பிறகும், ப்ரீ ரிலீஸ் வியாபரத்திலேயே லாபம் பார்த்திருக்கிறது தயாரிப்பு தரப்பு ஏஜிஎஸ்.
தமிழகத்தில் மட்டும் சுமார் 700+ திரையரங்குகளில் பிகில் ரிலீஸாவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சென்னையில் பல முக்கிய திரையரங்குகளை பிகில் கைப்பற்றி இருக்கிறது.
அதிலும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பெரும் சாதனையே படைத்துள்ளது பிகில். இரு மாநிலங்களையும் சேர்த்து, 675 தியேட்டர்களில் பிகில் ரிலீசாகிறது. குறிப்பாக, ஹைதராபாத்தில் மட்டும் 275 தியேட்டர்களில் பிகில் வெளியாகிறது.
தெலுங்கு பகுதியில், விஜய் படங்களில் மிகப்பெரிய ரிலீஸ் பிகில் தான்.
கேரளா முழுவதும் கிட்டத்தட்ட 200 தியேட்டர்களில் பிகில் ரிலீசாகிறது, அதிலும், கேரளாவில் 4 மணி காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு மேஜிக் ஃபிரேம்ஸ் இப்படத்தை ரிலீஸ் செய்கிறது.
கர்நாடகாவில் ஸ்ரீ கோகுல் ஃபில்ம்ஸ் பிகில் உரிமையை கைப்பற்றி, மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்கிறது.
#Bigil preliminary theatre list in Karnataka.
More screens will be added tomorrow.
Release by Sri Gokul Films. #BigilInKarnataka pic.twitter.com/JGoqccSKrA
— George Vijay (@VijayIsMyLife) October 20, 2019
மதுரையில் தெறிக்கும் பிகில் சத்தம்:
மதுரையில் பெரும்பான்மையான தியேட்டர்களில் பிகில் படமே ரிலீஸ் ஆகிறது.
ப்ரியா சினிமாஸ் (3)
வெற்றி சினிமாஸ்(3)
தமிழ் ஜெயா(2)
ஷண்முகா(2)
ஐநாக்ஸ்(5)
மணி இம்பாலா(2)
தங்கரீகல்
அமிர்தம்
கணேஷ்
தேவி கலைவாணி
மிட்லாண்ட்
எஸ்டிசி சோலமலை
எஸ்டிசி ஜாஸ் & அர்ஷ்
மதுரையில் மட்டும் 13 தியேட்டர்களில் 24 ஸ்க்ரீன்களில் பிகில் ரிலீஸ் ஆகிறது.
திருநெல்வேலி ஜில்லாவில் பிகில்:
திருநெல்வேலியிலும் பிகில் படமே ஆதிக்கம் செலுத்துகிறது. நெல்லையில் பெரிய தியேட்டர்களை பிகிலே ஆக்கிரமித்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பெரும்பாலான பெரிய தியேட்டர்களை பிகில் கைப்பற்றினாலும், கைதி படமும் பெரிய அளவில் ரிலீசாகிறது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 300 தியேட்டர்களில் கைதி ரிலீசாகிறது.
மால்களை பொறுத்தவரை, கைதி படமும் நிறைய தியேட்டர்களில் வெளியானாலும், ஸ்க்ரீன்களின் எண்ணிக்கை பிகிலை கம்பேர் செய்கையில் குறைவு தான்.
எடுத்துக்காட்டாக சொல்லவேண்டுமெனில், சென்னையில் ரோஹினி சில்வர் ஸ்க்ரீன் திரையரங்கில் ரிலீஸ் முதல் நாள் அன்று, பிகில் படத்துக்கு 5 ஸ்கரீனும், கைதி படத்துக்கு ஒரு ஸ்க்ரீனும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும், பிகிலுக்கு சற்றும் குறைவில்லாத எதிர்பார்ப்பு கைதி படத்திற்கு உள்ளது.
ஏனெனில், அதன் மேக்கிங், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் இயக்கம், டிரைலர் என்று கைதி எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியில் எக்கச்சக்கமாகவே இல்லது. அதுவும், '10 வருஷமா நா ஜெயில்ல இருந்தது மட்டும் தான தெரியும். அதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தனு தெரியாதுல' என்று கார்த்தி பேசும் வசனத்திற்கு தியேட்டரில் விசில் சத்தம் பிகிலைத் தொடும் என எதிர்பார்க்கலாம்.
பிகில் முதல் நாள் வசூல் எதிர்பார்ப்பு:
விஜய் படங்களில், கடந்த தீபாவளிக்கு வெளியான சர்கார் படம் தான், தமிழகத்தில் முதல் நாளில் அதிக கலெக்ஷன் குவித்த படமாக உள்ளது. முதல் நாளில் 31 கோடி வசூல் செய்தது.
பிகில், நிச்சயம் அதனை முறியடிக்கும் என்பதே விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இத்தனைக்கும் கைதி படமும் ரிலீசனாலும், 31 கோடி பென்ச்மார்க்கை பிகில் உடைக்கும் என்ற டிரேடிங் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.