Bigil Vs Kaithi: பண்டிகைகள் என்றாலே, கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, புதுப்படங்களின் ரிலீஸும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த வருட தீபாவளிக்கு, விஜய்யின் ‘பிகில்’ திரைப்படமும், கார்த்தியின் ‘கைதி’ திரைப்படமும் வெளியாகின்றன.
Advertisment
பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய பிகில் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார். மெர்சல், சர்கார் ஆகியப் படங்களுக்குப் பிறகு விஜய்யின் பிகில் படத்துக்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மெர்சல், சர்கார் ஆகியப் படங்களுக்குப் பிறகு ஹாட்ரிக்காக தீபாவளிக்கு வெளியாகிறது பிகில். கடந்தவாரம் வெளியான இதன் ட்ரைலர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஏற்படும் எதிர்பார்ப்பு, ‘பிகில்’ படத்தின் மீதும் எகிறியுள்ளது.
Prabhu sir ,why you are hate vijay ,i see all movie for you are production but you demaging vijay for you are all movie
கைதியைப் பொறுத்தவரையில் ஒரே இரவில் நடக்கும் ஆக்ஷன் - த்ரில்லர் படமாக இயக்கப்பட்டுள்ளது. இதனை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இவர் தான் விஜய்யின் அடுத்தப்படத்தை இயக்குகிறார் என்பது கூடுதல் தகவல். ஹீரோயின் இல்லாத, பாடல்கள் இல்லாத கைதி படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார் சாம். சி.எஸ். கார்த்தி நடிப்பில் இறுதியாக வெளியான ‘தேவ்’ தோல்வியை தழுவியது. அதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு வெளியாகும் கைதி வித்தியாசமான கதை களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், “விஜய் சாரை ஏன் வெறுக்கிறீர்கள், உங்களுடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸின் போதும், விஜய் சாரை டேமேஜ் செய்கிறீர்கள்” என கைதி தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் கேட்டிருந்தார் விஜய் ரசிகர் ஒருவர்.
Fans find their own troll materials to fight! We can’t help. I want all films to do well in the box office. But I don’t give a fuck to the faceless people comes up with their stupid attitude thinking they can make a change with abusive posts!! ????✌????
”பல ரசிகர்கள் இப்படி முட்டாள்தனமாக சிந்திக்கிறார்கள். இவை ஒவ்வொன்றையும் என்னால் விளக்க முடியாது! நாங்கள் திரைப்படங்களை உருவாக்குகிறோம், அதற்காக நாங்கள் நிற்கிறோம்! அவ்வளவுதான்” என அதற்கு பதிலளித்திருந்தார் பிரபு.
இதனைத் தொடர்ந்து, ”தளபதி விஜய்க்கு எதிராக உங்களிடம் எதுவும் இல்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அத்தகைய விளம்பரங்களை பரப்புவது ஆரோக்கியமானது அல்ல சகோதரா. இரண்டு படங்களும் சிறப்பாக ஓடட்டும். எங்களை இழிவுபடுத்துவதன் மூலம் உங்கள் திரைப்படத்தை விளம்பரப்படுத்துவது நெகட்டிவ்வை மட்டுமே பரப்புகிறது. பாஸிட்டிவை பரப்புங்கள். இந்த நாட்களில் உலகிற்கு அது தான் அதிகம் தேவை” என்று மற்றொரு விஜய் ரசிகர் கூறியிருந்தார்.
”ரசிகர்கள் சண்டையிட தங்களை ட்ரோல் மெட்டீரியல் ஆக்கிக் கொள்கிறார்கள். இதில் எங்களால் உதவ முடியாது. எல்லா படங்களும் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன். ஆனால் முகமற்றவர்களுக்கு நான் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர்கள் மோசமான பதிவுகளின் மூலம், மாற்றத்தை உருவாக்க முடியும் என்று நினைத்து, முட்டாள்தனமான அணுகுமுறையைக் கையாள்கிறார்கள்” என்று பதிலளித்திருந்தார் பிரபு.
இதனால் விஜய் ரசிகர்களும், கார்த்தி, சூர்யா ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருகிறார்கள்.