Bigil movie review updates : ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பிகில் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளையும், சிக்கல்களையும் கடந்து பிகில் படத்தின் அதிகாலை காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்திப்புக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவிக்கையில், "விடுமுறை தினங்களில் ஏற்கனவே சிறப்புக்காட்சிக்கு அனுமதி உள்ளது. இதனால் பிகில் திரைப்படத்திற்கு இன்று ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறப்புக்காட்சிக்கு அரசு அனுமதித்த கட்டணத்தையே வாங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்புக்காட்சிக்கான நிபந்தனைகளை பின்பற்றுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்ததால் இன்று ஒருநாள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.
தீபாவளியை முன்னிட்டு இன்று வெளியாகவுள்ள பிகில் பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி தந்த முதல்வர், தமிழக அரசுக்கு நன்றி என ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிகில் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்தும், பிகில் குறித்த ரசிகர்களின் விமர்சனம் குறித்தும் காண பிரத்யேக லைவ் அப்டேட்ஸ் உங்களுக்காக இதோ,
Live Blog
Bigil Movie Review Release Updates, Bigil FDFS Response, Thalapathy Vijay Atlee AR Rahman, Archana Kalpathi : அட்லி, விஜய் கூட்டணியின் தரமான சம்பவம் பிகில் - கொண்டாடும் ரசிகர்கள்
பிகில் வெற்றியை விஜய்யின் தெலுங்கு ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
Happy Tears ❤️💗😍♥️😍
Finally watched Two Shows #Whistle
Tears Rolling ❤️❤️
Response For The Movie From Telugu States Super
Weekend anta Kummude #Bigil Blockbuster
— Telugu Vijay Fans ʷʰⁱˢᵗˡᵉ (@TeluguVijayFans) October 25, 2019
பிகில் படம் குறித்து நெகட்டிவ் கருத்துகளை பதிவிட்டு வருபவர்களுக்காக ரசிகரின் பதிவு,
Amazing Marketing for #Bigil by the haters.
உங்க கிட்ட இன்னும் ரொம்பவே #வெறித்தனம் எதிர்பார்கிறேன் நன்பா!!
Whatever rating you give, troll you make, you can't change success / reality. You can continue to be the fox and say the grapes are sour. But Movie will keep scoring
— Prabhu (@Cricprabhu) October 25, 2019
ரசிகர் ஒருவரின் ட்வீட்,
U need to appreciate those girls 😍 They are d soul of d film lead by #Thalapathy 👏 1st half for verithanamana fans & 2nd half was like a bullet directly hitting all center audiences from @Atlee_dir 🔥 Manushan sedhukkurapla namma #Thalapathy ya ❤ #Bigil#PodraVediya pic.twitter.com/opmeQBqt93
— 𝙍𝙖𝙟𝙠𝙪𝙢𝙖𝙧 ❤ (@Rajj8990) October 25, 2019
நடிகை அதுல்யா ரவி தனது ட்வீட்டில்,
Watched #bigil💃#Thalapathy sir neenga Vera level verithanam @actorvijay 😍@Atlee_dir sir really u made all women proud and made us cry in so many scenes😍#Nayanthara Mam so cute 😀@am_kathir loved ur acting👍#Singapengal all rocked👌@Actress_Indhuja proud of u papa😘@agscinemas pic.twitter.com/jmjkylNYNF
— Athulya Ravi (@AthulyaOfficial) October 25, 2019
என்று குறிப்பிட்டுள்ளார்.
பிகில் படத்தில் தந்தை கேரக்டர் நடித்திருக்கும் விஜய்யின் ராயப்பன் கேரக்டரை தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
"Rayappan character adichika mudiyathu..." - What fans think about #Thalapathy's #Bigil | #BigilFDFS #BigilDiwali #BigilReview https://t.co/6SjNqQgDo3 pic.twitter.com/UUs9DqqaE7
— Behindwoods (@behindwoods) October 25, 2019
பிகில் கிளைமேக்ஸ் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதுவும், விஸ்வாசம் கிளைமாக்ஸ்-ஐ கோடிட்டு கம்பேர் செய்துள்ளனர்.
Best Climax Scene...
RT ~ Thalapathi
Like ~ Thala #BigilFDFS #Bigil #BigilDiwali #BigilReview @hazifoffl pic.twitter.com/7HvwkcKYGR
— 💥Hazif😎பிகில்🔥💥 (@hazifoffl) October 25, 2019
பிகில் திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் அதிகாலை காட்சி தாமதமானதாக கூறி, விஜய் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், விஜய் ரசிகர்கள் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விஜய் =யை வைத்து அடுத்ததாக படம் இயக்கி வருபவர் லோகேஷ் கனகராஜ். பிகிலுக்கு போட்டியாக வெளியாகியுள்ள கைதி படத்தின் இயக்குனரும் கூட. அவர் தனது ட்வீட்டில்,
Wishing my hero vijay anna and @Atlee_dir brother all the very best for #Bigil today...praying that both our films end up being a diwali saravedi for the audience ... 🙏🏻🙏🏻🙏🏻#Bigil #Kaithi
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) October 25, 2019
சாந்தனுவை போல நடிகர் சிபிராஜும் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் தனது ட்வீட்டில்,
Wishing #Bigil and #Kaithi all the best for a rocking box office this festival season!Hearing great reports for both the films😊👍 @actorvijay @Karthi_Offl @prabhu_sr @archanakalpathi @Atlee_dir @Dir_Lokesh
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) October 25, 2019
கிருஷ்ணகிரி: பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால் ரசிகர்கள் கோபம். கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இருந்த கடைகளின் பேனர்கள் உடைப்பு. அதிரடிப்படை போலீசார் குவிப்பு. இரவு நேரம் என்பதால் கற்களை கொண்டு தாக்குதல்.
கிருஷ்ணகிரி: பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால் ரசிகர்கள் கோபம். கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இருந்த கடைகளின் பேனர்கள் உடைப்பு. அதிரடிப்படை போலீசார் குவிப்பு. இரவு நேரம் என்பதால் கற்களை கொண்டு தாக்குதல். #BigilFDFS #BigilReview pic.twitter.com/qjpo9zLBOe
— Mahalingam Ponnusamy (@mahajournalist) October 25, 2019
பிகில் விமர்சனம் குறித்து இரு வகையான கருத்துகள் வருகிறது. பலர் நன்றாக இருக்கிறது என்றும், சிலர் மிக மிக சுமாரான படம் என்றும் ட்வீட் செய்து வருகின்றனர். எது எப்படியோ, 3 நாட்களுக்கு பிகில் சத்தம் விண்ணைப் பிளக்கும் என்பது உறுதி.
#BigilReview : 1.5/5
Worst movie of the decade. @Atlee_dir 's dull story and screenplay, @actorvijay 's bad mannerism, @arrahman 's average music, bad VFX. Everything is wrong with #Bigil. Joke is on us, the audience. Skip the movie and save your Diwali.
— IndiaBoxOffice1 (@indiaboxoffice1) October 25, 2019
பிகில் திரைப்படத்தில் சில மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், அனைவரும் ஒரு சேர கூறுவது, விஜய் தனி ஆளாக படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார் என்பதே.
Vijay solely makes this sports backdrop entertainer worth a watch with his charm and performance. #BigilFDFS #BigilReview #Bigil https://t.co/053bb30bND
— IndiaGlitz - Tamil (@igtamil) October 25, 2019
கேரளாவில் பிகில் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்று கூறப்படுகிறது.
Disappointing sports drama with a gangster angle. Weakest among #atlee films! Poor screenplay. Poor production values (Football scenes 🙄) Character of #Royappan and #ARR music dept. standsout! Other than that, not even worth half the hype!!!
2/5
BELOW AVERAGE
— KeralaBoxofficeStats (@kboxstats) October 25, 2019
பிகில் படத்தின் விமர்சனம் குறித்த ரசிகர் ஒருவரின் பதிவு,
#BigilReview from a Vijay Fan 💥 pic.twitter.com/D0ERoFdg85
— Valimai Virgin (@virgin_off) October 25, 2019
ஒருவார்த்தையில் பிகில் பற்றி சொல்லணும்னா, வெறித்தனம்
Watched #Bigil movie just now at special show here in London!
Outstanding Film by @Atlee_dir 💥@actorvijay Pattaya Kilapuraru🔥
A good mix of all elements (fun, emotions,fight,women Empowerment)
One Word - #Verithanam 🔥🔥#BigilDiwali
— 𑀦𑀸𑀘𑁄 | நாசோ | NaSo (@NChozhan) October 24, 2019
படம் பார்த்த அனைவரும் உச்சரிக்கும் ஒரே பெயர் ராயப்பன்,
#Bigil interval report: @Atlee_dir proves once again that he is the best when it comes to packaging a mass commercial entertainer 🔥🎉👍 One of the best performance from #Thalapathy as Rayappan #BigilDay Is sure to satisfy fans and families 👏👏👏 pic.twitter.com/7jFKK2s3Rp
— sridevi sreedhar (@sridevisreedhar) October 25, 2019
விஜய்யின் தீவிர ரசிகராக தன்னை எப்போதும் முன்னிலைப்படுத்துபவர் நடிகர் ஷாந்தனு. அவர் தனது ட்வீட்டில்,
Wishing both these films do wonders at the box office #Bigil & #Kaithi Best wishes to @actorvijay anna @Atlee_dir @am_kathir @Viveka_Lyrics @arrahman sir & team for a #Bigilleeeeyyy hit
My Director @Dir__Lokesh @Karthi_Offl @prabhu_sr & the whole team for a huge success 💛🔥 pic.twitter.com/cChlGGaRCe— Shanthnu 🌟 ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) October 25, 2019
பிகில் இரண்டாம் பாதி விமர்சனம் குறித்து பிரபல யூடியூப் சினிமா விமர்சகர் பிரஷாந்த் பதிவு,
#Bigil - Second half and it's emotions - Game saver and changer. Respect to @actorvijay and @Atlee_dir for taking women empowerment to the masses, for conveying it in a language that everyone will understand !!
You should b really proud to produce this movie @archanakalpathi !
— Prashanth Rangaswamy (@itisprashanth) October 25, 2019
பிகில் படத்தின் முதல் பாதி குறித்து பிரபல சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா ட்வீட்,
#Bigil 1st Half : Marana Mass.. #Thalapathy @actorvijay Verithanam..
Intro, songs and action sequences execution will exceed fans expectations.. @arrahman BGM Theri..
This is the best 1st half in any @Atlee_dir movie..
Bigil Class.. Rayappan and Michael Mass.. 👍
— Ramesh Bala (@rameshlaus) October 25, 2019
விஜய்யின் சமீபத்திய படங்களில் சிறந்த இன்ட்ரோ காட்சி பிகில் தான் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.
#Verithanam was PHENOMENAL!
One of the best intro numbers for #ThalapathyVijay in a long time. @dop_gkvishnu hit it outta the park with the RED tone and fabulous cam placements. Such an enjoyable experience seeing it with a packed crowd!#Bigil
— Sidhu (@sidhuwrites) October 25, 2019
பிகில் படத்தின் முதல் பாதி காதல், செண்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த அதிரடி போர்ஷன் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் ட்வீட்டாக உள்ளது.
#Bigil First Half - Saravedi 💥 Emotional Packed, after longtime Thalapathy in a Joyful character. #Rayappan is so Powerful. One if the Best character in Vijay's career.
Blockbuster 1st half.
Waiting for 2nd Half.— Tamil Censor (@TamilCensor) October 25, 2019
பிகில் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் அதிகாலைக் காட்சிகளுக்கு முண்டியடித்த ரசிகர்கள், தியேட்டர்கள் அதிர படத்தை ரசித்தனர். விஜய்யின் என்ட்ரிக்கு காது ஜவ்வுகள் கிழிந்துவிட்டது.
All set !!! #Bigil 😊. pic.twitter.com/6CXZKk8lXv
— Prashanth Rangaswamy (@itisprashanth) October 24, 2019
விஜய் படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் எதிர்ப்புகளை சந்திப்பது வழக்கமாகி விட்டது. 2012-ல் திரைக்கு வந்த துப்பாக்கி படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை தவறாக சித்தரித்து இருந்ததாக சர்ச்சை கிளம்பியது. 2013-ல் வெளியான தலைவா படத்தில் கதை சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டது.
அந்த படத்தில் இடம் பெற்ற ‘டைம் டூ லீடு’ என்ற வாசகத்துக்கும் பிரச்சினை கிளம்பியது. 2014-ல் வெளியான கத்தி திரைப்படத்தை இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் தயாரித்ததாக எதிர்ப்புகள் கிளம்பின. படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று போராட்டங்களும் நடந்தன. கதை திருட்டு வழக்கும் தொடரப்பட்டது.
2017-ல் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வரிக்கு எதிரான வசனம் இருந்ததால் பிரச்சினையில் சிக்கியது. 2018-ம் ஆண்டு வெளியான சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை கேலி செய்யும் காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பின. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யவும் முயற்சிகள் நடந்தது.
பின்னர் சர்ச்சை காட்சிகளை நீக்கி விட்டு படத்தை திரைக்கு கொண்டு வந்தனர். இப்போது பிகில் படமும் கதை திருட்டு வழக்கில் சிக்கி உள்ளது. சிறப்பு காட்சிகளுக்கும் அரசு தடை விதித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், “பூ விற்பவரை பட்டாசு விற்கும் வேலையில் அமர்த்தினால் ஏற்படும் சங்கடங்களை உதாரணமாக சொல்லி பொறுப்பில் யாரை உட்கார வைக்க வேண்டும் என்று விஜய் பேசி இருந்தார். பேனர் கலாசாரத்தையும் விமர்சித்தார். தடைகளை தாண்டி பிகில் இன்று திரைக்கு வந்துள்ளது.
விஜய்யின் முந்தைய சந்திரலேகா, பிரியமானவளே, ஷாஜகான், பகவதி, திருமலை, சிவகாசி, அழகிய தமிழ் மகன், வேலாயுதம், துப்பாக்கி, கத்தி, மெர்சல், சர்கார் ஆகிய படங்களும் தீபாவளிக்கே திரைக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights