Bigil: அடுத்தடுத்து ‘பிகில்’ அப்டேட் - உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

மெர்சலைத் தொடர்ந்து அட்லீ இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மெர்சலைத் தொடர்ந்து அட்லீ இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigil set to earn over 220 crore

பிகில் செகண்ட் லுக் போஸ்டர்

Thalapathy 63: நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அளவற்ற அப்டேட்களை அள்ளித் தந்து ரசிகர்களை குஷிப்படுத்தி விட்டனர் ‘பிகில்’ படக்குழுவினர்.

Advertisment

’தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வந்த அந்தப்படம் ஜூன் 22-ம் தேதி மாலை 6 மணியிலிருந்து ‘பிகில்’ என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்று நள்ளிரவு 12 மணிக்கு பிகில் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. உடனே ரசிகர்கள் இதனை டிரெண்ட் செய்து கொண்டாடினர்.

இந்நிலையில் 6 மணிக்கு ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக 5 மணிக்கு ட்விஸ்ட் வைத்தார், பிகில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்தார். அதன்படி 22-ம் தேதி மாலை 6 மணிக்கு மைக்கேலின் லுக் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது ‘பிகில்’ படத்தைப் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பிகில் படத்தின் வெளிநாட்டு உரிமையை, யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்டெர்ஸ் மற்றும் எக்ஸ் ஜென் ஸ்டூடியோ ஆகிய நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளதாம்.

Advertisment
Advertisements

மெர்சலைத் தொடர்ந்து அட்லீ இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், யோகிபாபு, இந்துஜா முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தீபாவளிக்கு வெளியாகும் பிகில் படத்தின் டீசர் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Atlee Actor Vijay Nayanthara

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: