அட்லி, நயன்தாராவை போல பேசி அசத்திய பிகில் பாண்டியம்மா!

Indraja Sankar: க்ளைமேக்ஸில் சரியாக விளையாடவில்லை என அனைவரையும் திட்டுவார் விஜய்.

Indhraja Shankar, Bigil Pandiyamma, Thalapathy Vijay
Indhraja Shankar

Bigil Pandiyammal: தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளில் அறிமுகமாகி, இன்று தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரோபோ ஷங்கர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என்று பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ரோபோ ஷங்கரின் மகளான இந்த்ரஜா டிக்டாக் மூலம் பிரபலமானார். டிக் டாக்கில் வசனம் பேசுவது, நடனமாடுவது என தன் திறமைகளை வெளிப்படுத்தியவருக்கு அடித்தது பிகில் ஜாக்பாட். இந்த்ரஜாவின் வீடியோவைப் பார்த்த அட்லி அவருக்கு விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பினைக்  கொடுத்தார்.

பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார் இந்த்ரஜா. க்ளைமேக்ஸில் சரியாக விளையாடவில்லை என அனைவரையும் திட்டுவார் விஜய். அப்போது இந்த்ரஜாவை பார்த்து, ‘குண்டம்மா’ என தொடர்ந்து கூப்பிடுவார். இதனால் வீறு கொண்டெழும் இந்த்ரஜா, கோல் போடுவார். அந்த காட்சி படமாக்கபட்ட போது, ”விஜய் சார் என்னிடம் ‘நான் உன்னை குண்டம்மா என்று கூப்பிடுவது தப்பாக ஒன்றும் உனக்கு இல்லையே’ என்று மன்னிப்பு கேட்டார்” என நேர்க்காணல்களிலும் குறிப்பிட்டிருந்தார் இந்த்ரஜா.

இந்நிலையில் அவர் சமீபத்தில் கலந்துக் கொண்ட நேர்க்காணலில் அட்லீ போன்றும் நயன்தாரா போன்றும் பேசி அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 150 நாட்கள் படப்பிடிப்புக்காக அவர்களுடனேயே இருந்ததால் அவர்களது  மேனரிசமும் எனக்கு தொற்றிக் கொண்டது எனவும் கூறியுள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigil pandiyamma indhraja shankar thalapathy vijay

Next Story
வறுமை; தாயின் தற்கொலை; புறக்கணிப்பு – பெரும் போராட்டத்திற்கு பிறகு விஜய் டிவியில் சாதித்த பிரபலம்nanjil vijayan vijay tv kalakka povathu yaaru champions - குடும்ப வறுமை; கண் முன்னே தீக்குளித்து இறந்த தாய் - பெரும் போராட்டத்திற்கு பிறகு விஜய் டிவியில் சாதித்த பிரபலம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express