scorecardresearch

போட்றா வெடிய : 25ம் தேதி முதல் “பிகில்” வெறித்தனம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

bigil release date : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம், இம்மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

bigil, kaithi release live updates
தளபதி விஜய்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம், இம்மாதம் 25ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லீ, விஜய் மூன்றாவதாக இணைந்துள்ள படம் பிகில். தீபாவளி திருநாளில் ரிலீஸ் செய்வதற்கென்றே, படக்குழுவினர் திட்டமிட்டு செயல்பட்டு வந்தனர்.

பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய், ராயப்பன், மைக்கேல், பிகில் என்று 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நயன்தாரா, விவேக், கதிர் யோகி பாபு என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருந்த நிலையில், அதன் ரிலீஸ் தேதியை அறிவிப்பதில் குளறுபடி இருந்துவந்தது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இந்நிலையில், பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, படம் 25ம் தேதி வெளியாக உள்ளதாக டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பட டிரைலர்களில் யூடியூபில் அதிக லைக்குகள் வாங்கிய படம் என்கிற பெருமை பிகில் டிரைலருக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு ஷாரூக் கான் நடித்த ஜீரோ படம் யூடியூபில் 2 மில்லியன் லைக்குகளை வாங்கியிருந்தது. பிகில் படம் அதைத்தாண்டி அதிக லைக்குகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. பார்வைகளைப் பொறுத்தவரை 12 கோடியே 6 லட்சத்து 27 ஆயிரம் பெற்றுள்ளது ஷாரூக்கானின் ஜீரோ. பிகில் படம் 2 கோடியே 98 லட்சத்து 64 ஆயிரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bigil release on october 25 official release

Best of Express