/tamil-ie/media/media_files/uploads/2019/10/Bigil-Satellite-rights.jpg)
TN Live Updates : Bigil Film court Case
Bigil Movie's Satellite and Digital Rights: இயக்குநர் அட்லீ இயக்கியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். தெறி மற்றும் மெர்சல் ஆகியப் படங்களுக்குப் பிறகு விஜய் - அட்லீயின் கூட்டணியில் பிகில் மூன்றாவது படமாக உருவாகியிருக்கிறது. இதனை திரையில் காண மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படத்தின் ட்ரைலர் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியானது. தங்களது மகிழ்ச்சியையும், ஆதரவையும் இந்தத் ட்ரைலரில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் ரசிகர்கள்.
அதாவது ட்ரைலர் வெளியாகிய 43 மணி நேரத்துக்குள் 22 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் இதனைப் பார்த்திருக்கிறார்கள். அதோடு 1.8 மில்லியன் ரசிகர்கள் இந்த ட்ரைலரை லைக் செய்துள்ளனர். தொடர்ந்து பிகில் படத்தின் ட்ரைலர், யூ-ட்யூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது.
படம் வெளியாக சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பிகில் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை மிகப்பெரிய விலையைப் பெற்றிருப்பது வந்துள்ளது. இதன் சேட்டிலைட் உரிமையை சன் நெட்வொர்க் 25 கோடிக்கு வாங்கியுள்ளது என்றும், டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் சுமார் 20 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள பிகில், வெளியீட்டிற்கு முன்பே, 45 கோடி லாபம் ஈட்டியுள்ளது. தவிர, நயன்தாரா, கதிர், இந்துஜா, விவேக், யோகி பாபு, ஆனந்தராஜ், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.