Thalapathy Vijay: நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘பிகில்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனை ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகியப் படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கியிருந்தார்.
Advertisment
’பிகில்’ திரைப்படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டிருந்தது. நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், இந்தூஜா, அம்ரிதா ஐயர், ரெபா மோனிகா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த பிகில் படத்தை ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருந்தது.
இப்படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய் பாடியிருந்தார். இப்படம் ரசிகர்களிடமும், குழந்தைகளிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதோடு, பெண்களைக் கொண்டாடும் வகையில், ’சிங்கப் பெண்ணே’ பாடல் இடம் பெற்றிருக்கிறது. அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருக்கும் பிகில் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
Advertisment
Advertisements
இந்நிலையில், விஜய்யும் நயன்தாராவும் இடம் பெற்றிருக்கும் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சென்னை ஸ்லாங்கில் இருவரும் பேசிக் கொள்ளும் அந்த வீடியோவை பலரும் ‘லைக்’ செய்து வருகின்றனர்.