பிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

Bigil Release: விதியை மீறி திரையிட்டால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

By: October 22, 2019, 2:40:47 PM

Thalapathy Vijay: மெர்சல் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிகில்’. இதனை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

தீபாவளி விருந்தாக வரும் வெள்ளிக்கிழமை வெளியாகும் பிகில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் நாள் முதல் காட்சிக்காக மழையையும் பொருட்படுத்தாமல், நீண்ட நேர வரிசையில் நின்று டிக்கெட் புக் செய்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

இந்நிலையில் பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் தீபாவளியன்று சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதியில்லை என்ற செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தவிர, விதியை மீறி திரையிட்டால்,  அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதோடு,  சிறப்புக் காட்சி அனுமதி மறுப்புக்கும், நடிகர் விஜய் பேச்சுக்கும் எந்த தொடர்பில்லை என்றும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Bigil special show thalapathy vijay kadambur raju

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X