பட்டையைக் கிளப்பும் வசூல்: தமிழ் ராக்கர்ஸை மீறி பிகில் சாதனை

Bigil vs TamilRockers : பிகில் வெடி உண்மையிலேயே செம மாஸ்தான்... என்பதை தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியான பின்பும் 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும்...

Bigil Tamil Movie box office collection beats TamilRockers : பிகில் வெடி உண்மையிலேயே செம மாஸ்தான்… என்பதை தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியான பின்பும் 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

விஜய் – இயக்குனர் அட்லீ தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக இணைந்துள்ள படம் பிகில். விளையாட்டை கதைக்கருவாக கொண்டு உருவான படம், வசூலில் நின்று விளையாடி சதம், இரட்டை சதம் என அசத்தி வருகிறது.
படம் வெளியாகி 1 வாரம் கடந்தபின்னும், பல தியேட்டர்களில் இன்னமும் அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்று வருகிறது.
பிகில் படம், தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் ரூ.100 கோடி வசூல் செய்த முதல்படம் என்ற பெருமையை பிகில் படம் பெற்றுள்ளது. பிகில் படம், சர்வதேச அளவில் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகில் படம் சர்வதேச ஆடியன்சையும் கவர்ந்துள்ளது என்பதற்கு அங்கு வசூல் ஆகியுள்ளதே சாட்சி என்று சினிமா ஆர்வலர் தரண் ஆதர்ஷ் டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

2019ம் ஆண்டு விஜய், அஜித்திற்கு சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளதாக சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா தெரிவித்துள்ளார். விஸ்வாசம் படம் 8 நாட்களில் ரூ.125 கோடியும், பிகில் படம் 7 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

சர்வதேச சந்தையில், பிகில் படம் அதிக லாபம் ஈட்டியுள்ளது. கைதி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் இருந்தபோதிலும் வசூல்ரீதியாக அந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை என்பதே நிதர்சனம்.

ரூ.180 கோடி பட்ஜெட்டில், ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், பிகில் படத்தை தயாரித்து இருந்தது. நயன்தாரா, யோகிபாபு என நட்சத்திர பட்டாளமே, பிகில் படத்தை அலங்கரித்தது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close