Bigil Tamil Movie VS Tamil Rockers: பிகில் வசூல், 300 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக கூறுகிறார்கள் பாக்ஸ் ஆபீஸ் புள்ளிகள். 3 வாரங்களை கடந்த நிலையில் படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் வருகை இன்னும் குறையவில்லை என்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ் ராக்கர்ஸை மீறிய இந்த வெற்றி, பிரமிப்பானது.
விஜய் நடிப்பில் வெளியான பிகில் 17 நாள் முடிவில் மொத்தம் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. தமிழகத்தில் மட்டும் 17 நாட்களில் வசூலித்த தொகை 144 கோடி, இந்தியாவின் இதர மாநிலங்களில் 66 கோடி, வெளிநாடுகளில் ரூ 90 கோடி என 300 கோடி ரூபாய்க்கு கணக்கு சொல்கிறார்கள், பாக்ஸ் ஆபீஸ் புள்ளிகள்.
BIgil Box Office Collection
Bigil Tamil Movie Box Office Collection: பிகில் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்
தமிழ்ப் படங்களில் இதற்கு முன்பு இப்படி 300 கோடி வசூலைத் தொட்ட ஒரே தமிழ்ப் படம் ரஜினியின் 2.0 மட்டுமே! அந்த வசூலை பிகில் முறியடித்திருப்பதாக உற்சாகத்தில் துள்ளுகிறார்கள் தளபதியின் ரசிகர்கள்.
கேரளாவில் கொல்லம் ஜிமேக்ஸ் தியேட்டரில் 3-வது ஞாயிற்றுக் கிழமையும் ஹவுஸ்ஃபுல் காட்சியாக ஓடியது மட்டுமல்லாமல், எக்ஸ்ட்ரா இருக்கைகள் போட்டு படத்தை ஓட்டியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸில் தொடர்ச்சியாக 4 ஆண்டுகளாக (2016-தெறி, 2017-மெர்சல், 2018-சர்கார், 2019-பிகில்) விஜய் படமே வசூலில் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறார்கள்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான கைதி படத்திற்கு கிடைத்த அளவுக்கு பிகில் படத்திற்கு ‘ரிவ்வியூ’ பாசிட்டிவாக கிடைக்கவில்லை. எனினும் விஜய்யின் ரசிகர்கள், விஜய் படத்திற்கான ஃபேமிலி ஆடியன்ஸ் ஆகிய காரணங்களால் வசூலில் குறை வைக்கவில்லை. தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் இந்தப் படத்தை ரிலீஸ் அன்றே திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டும் பிகில் வசூல் பெரிதாக பாதிக்கவில்லை.
இதற்கிடையே பிகில் வசூல் உலக அளவில் 300 கோடி ரூபாயை கடந்திருப்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியை டிவிட்டரில் ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால் நவம்பர் 3-ம் தேதிக்கு பிறகு அர்ச்சனாவின் டிவிட்டர் அக்கவுண்டில் அப்டேட் எதுவும் இல்லை.
நாமும் கேட்போம்... அப்டேட் கொடுங்க அர்ச்சனா!