/tamil-ie/media/media_files/uploads/2019/09/Verithanam-sets-new-record.jpg)
பிகில்
Bigil Teaser Leaked: நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கியிருக்கும் திரைப்படம் 'பிகில்’. ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
பெண்கள் கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி இயக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, ஆனந்தராஜ், ரெபா மோனிகா ஜோன், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிகில் படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தனியார் பொறியியல் கல்லூரியில் நடந்தது. அங்கு விஜய் பேசியவைகள் ஆளும் கட்சியைக் குறி வைத்து பேசப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து எதன் அடிப்படையில் இசைவெளியீடு நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது என கல்லூரி நிர்வாகத்திடம் உயர் கல்வித்துறை விளக்கம் கேட்டது.
இந்நிலையில் அக்டோபர் முதல் வாரத்தில் பிகில் படத்தின் டீசர் வெளியாகும் என அட்லீ தெரிவித்திருந்தார். இதற்கிடையே படத்தின் டீசர் இணையத்தில் கசிந்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். பிகில் டீசர் லீக்காகி விட்டது எனப் பதிவிட்டு, அஜித் ரசிகர்கள் சில வினாடிகள் கொண்ட வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். டீசர் ஒன்றும் லீக்காகவில்லை என விஜய் ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர். அதோடு, விரைவில் டீசர் குறித்த அறிவிப்பு வரப்போகிறது என ட்விட்டரில் ‘பிகில் டீசர்’ என ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர்.
உண்மையில் பிகில் டீசர் வெளியாகிவிட்டதா, அப்படியென்றால் அதிகாரப்பூர்வமாக எப்போது டீசரை வெளியிடுவார்கள் என காத்துக் கொண்டிருக்கிறார்கள் சில நடுநிலை ரசிகர்கள். இதற்கிடையே பிகில் படத்தின் சிங்கப் பெண்ணே பாடல் இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.