Advertisment

பிகில்: விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அரக்க டிரைலர் - ஸ்க்ரீனை கிழிக்காமல் இருந்தால் சரி

இசை வெளியீட்டின் போதே, 'நான் முதல்வரானால்...' என்று விஜய் பேசிய பேச்சு, ஆளும் தரப்புக்கு சற்று எரிச்சலைக் கொடுக்க அங்கேயே பிரச்சனை புகைய ஆரம்பித்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigil trailer from 12th october vijay bigil trailer atlee ar rahman

Bigil trailer from 12th october vijay bigil trailer atlee ar rahman

Bigil Trailer Update: ஒருவழியாக பிகில் டிரைலர் வரும் அக்.12ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. படம் தொடர்பான சாதாரண விஷயத்தைக் கூட இந்திய அளவில் டிரெண்டாக்கும் விஜய் ரசிகர்கள், டிரைலரை சும்மா விடுவார்களா என்ன!. இப்போதே பெரும் கொண்டாட்டத்துக்கு தயாராகிவிட்டனர்.

Advertisment

பிகில் டிரைலர் சத்தம் விண்ணை எட்டி, இதர சாதனைகளை எட்டி உதைப்பதற்கு முன்னர், தளபதியின் முந்தைய சில படங்களின் ரெக்கார்டுகளையும், சில தரமான சம்பவங்களையும் இங்கே பார்ப்போம்.

மெர்சல் 

அட்லி இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக நடித்த படம் மெர்சல். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் ஃபில்ம்ஸ் இப்படத்தை தயாரித்திருந்தது. கடந்த 2017ம் ஆண்டு செப்.21ம் தேதி வெளியான இப்படத்தின் டீசர், இன்றைய தேதி வரை 42 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

படம் வெளியாவதற்கு முன்னர், தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தொடங்கிய சிக்கல், படம் ரிலீசாகியும் நீடித்தது, வெவ்வேறு வடிவத்தில். தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் திட்டமிட்டப்படி தீபாவளிக்கு வெளியாகுமா என ஹீரோவுக்கே சந்தேகம் வர, ஒருக்கட்டத்தில், 'பொறுத்தது போதும்' என்று திமிறி எழுந்த விஜய், நேராக முதல்வரை சந்தித்து வேண்டுகோள் வைக்க, சர்ச்சையின்றி வெளியானது மெர்சல்.

படத்தில் ஹிந்து மதத்தை விமர்சிக்கும் விதமாக விஜய் நடித்திருப்பதாக பாஜகவினர் பிரச்சனை எழுப்ப, ஸ்டாலின், ராகுல் காந்தி வரை விஜய்க்கும், அப்படத்திற்கும் ஆதரவாக குரல் கொடுக்கும் அளவுக்கு சென்றது.

விஜய்யையே ஜோசப் விஜய்யாக மூலை முடுக்கெங்கும் அறிமுகப்படுத்தியது.

சமீபத்தில் கூட, அப்படத்தில் பணிபுரிந்த மேஜிக் நிபுணருக்கு ஊதிய பாக்கி வைத்திருப்பதாக பிரச்சனை எழுந்தது. அந்த நிபுணரே, 'எனக்கு இன்னும் என் சம்பளத்தை கொடுக்கவில்லை' என்று வீடியோ வெளியிட்டிருந்தார்.

விஜய் ரசிகர்களை பெரிதும் திருப்திப்படுத்திய மெர்சல் திரைப்படம், வெகுஜனங்களை கவர்ந்ததா என்றால் அது கேள்விக் குறிதான்.

சர்கார்

கடந்த 2018ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகியிருந்த சர்கார், விஜய்யின் படங்களிலேயே உச்சபட்ச பிரச்சனைகளை சந்தித்தது என்று சொல்லாம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க, அதே ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்தின் டீசர், 2018 அக்.19ம் தேதி வெளியானது. இதுவரை, 41 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை இப்படம் பெற்றுள்ளது.

இசை வெளியீட்டின் போதே, 'நான் முதல்வரானால்...' என்று விஜய் பேசிய பேச்சு, ஆளும் தரப்புக்கு சற்று எரிச்சலைக் கொடுக்க அங்கேயே பிரச்சனை புகைய ஆரம்பித்தது. படம் ரிலீசாகி, அரசின் சில நலத்திட்டங்களை விமர்சிப்பது போல காட்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி, பல கரை வேஷ்டிகளால், தமிழகம் முழுவதும் பரவலாக பல தியேட்டர்களின் வைக்கப்பட்டிருந்த விஜய்யின் பேனர்கள் கிழிக்கப்பட்டது. கட் அவுட்களை உடைக்கப்பட்டன. பிறகு புஸ்வானம் மீது பெய்த மழையாய் பிரச்சனை தானாகவே ஓய்ந்தது.

பிகில்

இந்த நிலையில் தான், பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பிகில் டிரைலர் ஊதப்படவிருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டின் போதும் அசராத விஜய், 'தகுதியான நபர்கள் தகுதியான இடத்தில் இல்லாமல் போனால் இப்படித் தான்' என்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்பு உச்சரிக்க, அரங்கம் அதிர்ந்தது.

'என்னய்யா இப்படி பேசிட்டாப்-ல' என்று விஜய்க்கு நெருக்கமான சிலர் நெருடலாக உணர்ந்தாலும், எதைப்பற்றியும் கவலைப்படாத தளபதி, வழக்கம் போல் தனது 'சைலன்ட் கில்லர்' பார்முலாவில் படத்தை புரமோட் செய்திருக்கிறார்.

ஏ.ஜி.எஸ். குரூப் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் மிரட்டியிருக்கிறாராம். அதிலும், தந்தை விஜய் ரோல், மாஸின் உச்சக்கட்டமாக இருக்கிறதாம். நிச்சயம், பிகில் டிரைலர் விஜய் - அட்லி காம்போவின் முந்தைய படங்களை விட மிக அருமையாக வந்திருப்பதாக சொல்கின்றனர் படக்குழுவுக்கு நெருக்கமானோர். இதனால், தளபதி ரசிகர்களுக்கு ஒரு அரக்க டிரைலர் காத்துக் கொண்டிருக்கிறது என்பது உறுதி!

ரசிகர்கள் ஆர்வக் கோளாறில் தியேட்டர் ஸ்க்ரீனை கிழிக்காமல் இருந்தால் சரி.

Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment