Bigil Trailer: ’தெறி’ மற்றும் ’மெர்சல்’ படத்திற்கு பிறகு, நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீயின் மூன்றாவது படமான ‘பிகில்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட ‘பிகில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் இந்த படம் ஒரு விளையாட்டு படம் என்பதை உறுதிப்படுத்தின. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக யூகங்கள் கிளம்பின.
இருப்பினும், சனிக்கிழமை வெளியான பிகில் படத்தின் டிரெய்லர் இதை உறுதிப்படுத்துகிறது. மைக்கேல் என்ற இளைய விஜய் (ஆனால் அவர் தனது ஜெர்சியில் ‘பிகில்’ என்ற புனைப்பெயருடன் இருக்கிறார்) ஒரு கால்பந்தாட்ட வீரர், பின்னர் பெண்கள் அணிக்கு பயிற்சி அளிக்கிறார். வயதான விஜய், ராயப்பன், தங்க மனதுடன் உள்ளூர் டானாக வலம் வருகிறார்.
பிகில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, சமூக வலைதளத்தில் பிகில் ட்ரைலரின் லிங்கை ஷேர் செய்து, “எங்களுக்கு கால்பந்து எல்லம் தெரியாது அனா எங்க ஆட்டம் வெறித்தனாம இருக்கும்!” என்று குறிப்பிட்டிருந்தார்.
பிகில் ட்ரெய்லரைப் பார்த்து அட்லியை முதன்முதலில் பாராட்டியவர்களில் பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹரும் ஒருவர், இது ஒரு ‘பிளாக்பஸ்டர்’ என்று கூறிய அவர், தனது ட்வீட்டில் ‘தளபதி விஜய்யையும்’ வாழ்த்தியிருந்தார். கிரவுண்டின் உள்ளே பெண்கள் பயிற்சியில் ஈடுபடுவதை ட்ரைலரில் காண முடிகிறது. இது ‘எல்லா பெண்களுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது’ எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இயக்குநர் அட்லீ முன்பு கூறியது போல், பல்வேறு விளையாட்டு போட்டிகளை காட்சிப்படுத்த பிரமாண்ட ஸ்டேடியத்தை அமைக்க, தயாரிப்பாளர்கள் அதிகம் மெனக்கெட்டுள்ளது, ட்ரைலரில் நன்றாக தெரிகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இடி போன்ற இசை ட்ரைலரை சுவாரஸ்யப்படுத்துகிறது.
மோடி – ஜின்பிங் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
நயன்தாரா, கதிர் மற்றும் பிற துணை கதாபாத்திரங்கள் கிளிப்பில் ஆங்காங்கே தோன்றுவதைப் பார்க்கும் போது, படம் முழுக்க முழுக்க விஜய்யின்’ஷோ’வாக இருக்கும் எனத் தோன்றுகிறது. 180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம், சில மாதங்களில் சீனாவிலும் வெளியிடப்படும் என்று அர்ச்சனா கல்பாத்தி தனது நேர்க்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
’பிகில்’ படத்தில் ஜாக்கி ஷெராஃப், விவேக், கதிர், யோகி பாபு, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, காயத்ரி ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஏற்கனவே ”சிங்கப்பெண்ணே”, ”வெறித்தனம்” போன்ற பாடல்கள் ‘தெறி’ ஹிட்டடித்துள்ளன. ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படம், ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாவது குறிப்பிடத்தக்கது.