அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்திருக்கும் பிகில் படத்தின் டிரைலர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது. தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் மிக பிரம்மாண்டமாக எடுத்திருக்கும் இப்படத்தில் விஜய் இரட்டை முகம் காட்டி மிரட்டியிருக்கிறார். ரஹ்மான் இசையில், 'வெறித்தனம்' பாடல் சந்து பொந்து ஹிட் அடிக்க, அதே எதிர்பார்ப்புடன் இன்றைய டிரைலருக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.
Advertisment
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் என்றால் அது ரஜினி தான். ஆனால், அவரது era இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், விஜய் - அஜித்தின் மார்க்கெட் அவருக்கு அடுத்த நிலையில் உள்ளன. இங்கே மார்க்கெட் என்பது நடிகர்களின் சம்பளம் மற்றும் பட வியாபாரங்களின் அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது.
மார்க்கெட் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.... டிரைலரில் யார் ரியல் 'மார்க்கெட் ராஜா' என்பதை லைட்டாக இங்கே பார்ப்போம். அதாவது, யாருடைய படத்தின் டிரைலருக்கு யூடியூபில் அதிக பார்வைகள் கிடைத்துள்ளன என்ற அடிப்படையில் இச்செய்தி.
விஜய்யை பொறுத்தவரை, சமீபத்தில் அவரது படங்களுக்கு டிரைலர் ரிலீஸ் செய்யவில்லை. கடைசியாக பைரவா படத்திற்கு தான் டிரைலர் வெளியிடப்பட்டது.
Advertisment
Advertisements
இப்படத்திற்கு 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தன.
அதற்கு முன்னதாக, இதே அட்லி இயக்கத்தில் விஜய் முதன் முறையாக நடித்த தெறி படத்துக்கும் டிரைலர் வெளியிடப்பட்டது.
இதற்கு அப்போதே, 14 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தன.
அதற்கு முன்னர் புலி படத்துக்கு 9.8 மில்லியன் பார்வைகளும், கத்தி படத்துக்கு 6.6 மில்லியன் பார்வைகளும் கிடைத்தன.
ஆனால், மெர்சல், சர்கார் ஆகிய படங்களுக்கு டீசர் மட்டுமே வெளியிடப்பட்டன.
அஜித்தைப் பொறுத்தவரை, கடந்த பொங்கலுக்கு வெளியான 'விஸ்வாசம்' படத்தின் டிரைலர் 31 மில்லியன் பார்வைகள் பெற்றது. நேர்கொண்ட பார்வை 16 மில்லியன் பார்வைகளும், விவேகம் 16 மில்லியன் பார்வைகளும் பெற்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பொறுத்தவரை, கடைசியாக ரிலீசான 'பேட்ட' படத்தின் டிரைலர் 26 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. 2.0 திரைப்படம் 20 மில்லியன் பார்வைகளையும், காலா 13 மில்லியன் பார்வைகளையும் பெற்றது.
ஒட்டுமொத்தமாக பார்த்தோமெனில், ரஜினியாகட்டும், விஜய்யாகட்டும், அஜித்தாகட்டும், குறிப்பிட்ட அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை பொறுத்தே, டிரைலரோ, டீசரோ மக்களிடம் வரவேற்பைப் பெறுகின்றன. இயக்குனர், பாடல்கள் என்பதில் தொடங்கி இயற்கையாகவே மக்கள் மனதில் பதியும் Positivity-யின் அடிப்படையில் தான் ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அமைகிறது. ஹீரோக்களின் நட்சத்திர அந்தஸ்து என்பது இரண்டாம் பட்சம் தான்.
20 வருடங்களுக்கு முன்பு ரஜினி மீதிருந்த வெறித்தனத்திற்கு, இப்போதிருந்த டெக்னாலஜி அப்போது இருந்திருந்தால், யாருமே நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கான டிரைலர், டீசர் ரெக்கார்டுகளை நியூமரிக்கலாக அன்றைய ரஜினி படைத்திருப்பார். இன்னும் 100 வருடங்கள் ஆகியிருந்தாலும் கூட அந்த ரெக்கார்டுகளை அசைத்துக் கூட பார்த்திருக்க முடியாது.
ஆனால், அதே ரஜினி தான் காலா படத்தின் ஹீரோ. ஆனால், எதிர்பார்ப்பு என்பது குறைவாக இருந்த காரணத்தால், டிரைலரின் ரெஸ்பான்ஸும் குறைந்ததை நாம் காண முடிகிறது. அதுவே, பேட்ட படத்தின் ரெஸ்பான்ஸ் மிக அதிகம். ஏனெனில், எதிர்பார்ப்பு அதிகம்.
ஸோ, இங்கே டிரைலர், டீசர் என்ற யூடியூப் மாயாஜாலங்களில் இந்த ஹீரோ தான் நம்பர்.1 என்று யாரையுமே குறிப்பிட முடியாது என்பதே நிதர்சனம்.