/tamil-ie/media/media_files/uploads/2019/09/bigil-1.jpg)
thalapathi vijay bigil songs video lyric, thalapathi vijay nayanthara bigil songs, பிகில், உனக்காக பாடல்
Bigil Unakaga Song Video Lyric: தளபதி விஜய் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சியை அள்ளித் தெளிக்கிறார்கள் படக் குழுவினர். படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்ட அடுத்த நாளே உருக வைக்கும் மெலோடியின் வீடியோ லைரிக்கையும் வெளியிட்டு திணறடித்திருக்கிறார்கள். 19-ம் தேதி இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய்- நயன்தாரா நடிப்பில் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. தளபதி விஜய் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இந்தப் படம் உள்ளாகி இருக்கிறது. இந்தப் படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை நேற்று ( செப்டம்பர் 17) படக் குழுவினர் வெளியிட்டனர்.
அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து விஜய் - நயன்தாரா ரசிகர்கள் மீள்வதற்கு முன்பாக இன்று படத்தில் இடம்பெறும் ‘உனக்காக’ என தொடங்கும் பாடலின் வீடியோ லைரிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையில், விவேக் வரிகளில் பாடல் ரசிகர்களை தாலாட்டுகிறது.
Here is the romantic track from @arrahman sir for #Bigil#UNAKAGA♥️ @actorvijay Sir #Nayanthara@Atlee_dir@Ags_production@SonyMusicSouth@Screensceneoffl@Lyricist_Vivek@dop_gkvishnu@muthurajthangvl@am_kathir@Actor_Vivek@iYogiBabuhttps://t.co/ZS5QZ5AnnV Live at 4:30pm ????
— Archana Kalpathi (@archanakalpathi) September 18, 2019
விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் இந்தப் பாடல் ரிலீஸை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். தொடர்ந்து 3-வது நாள் கொண்டாட்டமாக செப்டம்பர் 19 (வியாழக்கிழமை) படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.