/tamil-ie/media/media_files/uploads/2019/07/Bigil-Vijay-Fanmade-posters.jpg)
News today live updates
Bigil Fan Made Posters: நடிகர் விஜய்யின் ‘பிகில்’ திரைப்படம் பற்றிய தகவல்கள் தான் சமீபமாக சோஷியல் மீடியா டிரெண்ட். பிரமாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் அப்பா - மகன் என இரு வேடத்தில் நடிக்கிறார் விஜய்.
மகன் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராகவும், தந்தை விஜய் ’டானாகவும்’ திரையில் தோன்றி, ரசிகர்களை குஷிப்படுத்தவிருக்கிறார்கள். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பிகில் படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் அட்லீ இயக்கியுள்ளார். விவேக், கதிர், நயன்தாரா, இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
Share your fan-made posters of #Bigil today and get a chance to be featured on our page! ????#FanArtisticFriday#FanArtFriday@archanakalpathipic.twitter.com/pJf4Bv0xJZ
— AGS Entertainment (@Ags_production) 5 July 2019
இந்நிலையில் பிகில் படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஜி.எஸ் நிறுவனம், விஜய் ரசிகர்களுக்கு ஓர் பொன்னான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. அதாவது ரசிகர்கள் அவர்களின் கற்பனை திறனுக்கு ஏற்றவாறு ’பிகில் ஃபேன்மேட்’ போஸ்டர்களை உருவாக்கும்படியும், சிறந்த போஸ்டர்கள் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ்-ன் சமூக வலைதள பக்கங்களில் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.
விஜய் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பைக் காட்டும் விதமாக, அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் தயாரிப்பு நிறுவனத்தின் டைம்லைன் போஸ்டர்களால் நிரம்பி வழிந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.