ரஜினியின் தர்பார் போஸ்டரை ரிலீஸ் செய்யும் சூப்பர் ஸ்டார்ஸ் யாருன்னு பாருங்க!

Rajinikanth Darbar Motion Poster Release: ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் பட போஸ்டர் நவம்பர் 7 ஆம் தேதி 4 மொழிகளில் வெளியிடப்படுகிறது. தர்பார் பட...

Rajinikanth Darbar Motion Poster Release: ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் பட போஸ்டர் நவம்பர் 7 ஆம் தேதி 4 மொழிகளில் வெளியிடப்படுகிறது. தர்பார் பட போஸ்டரை நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான், மோகன் லால் ஆகியோர் வெளியிட உள்ளனர்.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த நடித்துள்ள படம் தர்பார். இந்த படத்தில் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்துவருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் வெளியிடப்படுகிறது.

ரஜினிகாந்த்தின் தர்பார் படம் பொங்கல் பண்டியையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் படத்துக்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன் வேலைகளும் திட்டமிடப்பட்டு நடதுவருகிறது.

அந்த வகையில், ரஜினிகாந்த்தின் தர்பார் படம் போஸ்டரை நான்கு மொழிகளிலும் வெளியிட பெரிய அளவில் திட்டமிட்டுள்ளது லைகா நிறுவனம். அதன்படி நாளை நவம்பர் 7 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் தர்பார் போஸ்டர் வெளியிடப்படுகிறது.

தமிழ் தெலுங்கு தர்பார் போஸ்டர்களை கமல்ஹாசன் வெளியிடுகிறார். இந்தி தர்பார் போஸ்டரை பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிடுகிறார். மலையாள தர்பார் போஸ்டரை மோகன்லால் வெளியிடுகிறார்.

இப்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தர்பார் பட போஸ்டரை நான்கு மொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகர்கள் வெளியிடுகிறார்கள் என்பது ரசிகர்கள் இடையே படத்தை பற்றிய பெரிய எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

Web Title:

Rajinikanth darbar motion poster to release by kamal haasan in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close