/tamil-ie/media/media_files/uploads/2019/06/template-31-2.jpg)
Tamil Nadu news today live updates
Vijay's Bigil Update: நடிகர் விஜய் தற்போது ‘பிகில்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் அட்லீ இயக்குகிறார். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். மெர்சல் படத்தைத் தொடர்ந்து அட்லீயும், சர்காரை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் இதில் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளனர்.
பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி இயக்கப்படும் ’பிகில்’ படத்தில் அப்பா - மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார் விஜய். சிவேக், நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் உள்ளிட்ட சில அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இதன் டீசர் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியுள்ளது.
இதற்கிடையே பிகில் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விவேக்கின் வரிகளில் விஜய் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடியிருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அர்ச்சனா கல்பாத்தி அறிவித்திருந்தார். இந்நிலையில் பிகில் படத்தில் உண்மையான கால் பந்தாட்ட வீரர் ஒருவரும் நடித்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.
பிரபல கால்பந்தாட்ட வீரர் ஐ.எம்.விஜயன் அப்பா கதாபாத்திரத்தில் வரும் ‘ராயப்பனுடன்’ முக்கியக் காட்சிகளில் நடித்துள்ளாராம். விஜயன் ஏற்கனவே திமிரு, கெத்து, கொம்பன் ஆகிய தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாளப் படங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.