Bigil Update: அடுத்தடுத்து விஜய் ரசிகர்களுக்கு வெளியான பிகில் அப்டேட்!

பிகில் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை, ’ஸ்கிரீன்சீன்’ நிறுவனம் பெற்றுள்ளதாம்.

பிகில் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை, ’ஸ்கிரீன்சீன்’ நிறுவனம் பெற்றுள்ளதாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigil Full Movie Download Tamilrockers, Bigil Tamil Movie, Bigil Tamil Movie Online Watch, பிகில், பிகில் ஃபுல் மூவி, தமிழ் ராக்கர்ஸ்

Bigil Full Movie Download Tamilrockers, Bigil Tamil Movie, Bigil Tamil Movie Online Watch, பிகில், பிகில் ஃபுல் மூவி, தமிழ் ராக்கர்ஸ்

Bigil Theatrical Rights: சர்கார் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது ‘பிகில்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisment

இயக்குநர் அட்லீ இயக்கும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ். எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. பெண்கள் கால் பந்தாட்டத்தை மையப்படுத்தி இயக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் விஜய், அப்பா - மகன் என இரு வேடங்களில் நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இதன் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இதில் விஜய்யுடன் இணைந்து விவேக், கதிர், நயன்தாரா, இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் மும்பை பறக்கும் விஜய், அங்கு நடக்கும் பிகில் படத்தின் இறுதிக்கட்ட படபிடிப்பில் கலந்துக் கொள்கிறார்.

Advertisment
Advertisements

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தைப் பற்றிய ஹாட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், பிகில் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை, ’ஸ்கிரீன்சீன்’ நிறுவனம் பெற்றுள்ளதாம். அதோடு எக்ஸ்ஜென் ஸ்டூடியோ மற்றும் யூனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் பிகில் படத்தின் வெளிநாட்டு உரிமையைப் பெற்றுள்ளன. இந்தத் தகவலை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

Actor Vijay Thalapathy Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: