/tamil-ie/media/media_files/uploads/2020/05/Singer-Shweta-Pandit-blessed-with-baby-girl.jpg)
Singer Shweta Pandit blessed with baby girl
Shweta Pandit : சில படங்கள் தோல்வியை தழுவினாலும் அதில் இடம்பெற்றிருந்த பாடல்கள் மட்டும் எவர்கிரீனாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும். அந்த வகையில் நடிகர் அஜீத் நடித்த பில்லா 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. குறிப்பாக முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை.
கிருஷ்ணகிரியையும் விட்டு வைக்காத கொரோனா…. ஆரஞ்சில் இருந்து சிவப்பிற்கு மாறிய அரியலூர்!
இருப்பினும் அந்தப் படத்தில் இடம்பெற்ற, ’இதயம் இந்த இதயம்’ என்ற மெல்லிசை பாடல் இன்றளவும் ரசிகர்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த அந்தப் பாடலை, பாடகி ஸ்வேதா பண்டிட் பாடியிருந்தார். அதோடு சூர்யாவின், ’அஞ்சான்’, ஜெயம் ரவியின் ’ஆதிபகவன்’, ஆர்யா நடித்திருந்த ’வேட்டை’, ’இஞ்சி இடுப்பழகி’ உள்ளிட்ட படங்களிலும் ஸ்வேதா பாடியிருக்கிறார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு இத்தாலியன் திரைப்பட தயாரிப்பாளரான இவனோ என்பவரை, திருமணம் செய்துக் கொண்டார் ஸ்வேதா. இத்தாலியில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது அந்தக் குழந்தைக்கு இஸாரா என பெயரிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால், உலகமே கதி கலங்கி போயிருக்கிறது. குறிப்பாக இத்தாலியில் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. இதற்கிடையே, தங்கள் வாழ்க்கையின் புதுவரவு, இந்தத் தருணத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக இந்தத் தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.
எஸ்.பி.ஐ அதிகாரிக்கு கொரோனா: தனிமைப்படுத்தலில் வங்கி ஊழியர்கள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.