/tamil-ie/media/media_files/uploads/2020/06/bindu-madhavi123.jpg)
coronavirus, covid-19, lock down, bindu madhavi, actress bindu madhavi isolated, bindu madhavi isolated, கொரோனா வைரஸ், பிந்து மாதவி, கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டார் பிந்து மாதவி, வைரல் வீடியோ, latest tamil cinema news, latest video news, latest viral video news, viral video
நடிகை பிந்து மாதவி வசிக்கும் அப்பார்ட்மெண்ட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் மற்ற குடியிருப்பு வாசிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால், பிந்து மாதவி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தமிழ் சினிமாவில் குறிபிடும்படியான ஒரு நடிகையாக முத்திரை பதித்துள்ளார்.
நடிகை பிந்து மாதவி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில், பிந்து மாதவி வசிக்கும் அப்பார்ட்மெண்ட் வாயில் கேட்ஐ மாநகராட்சி ஊழியர்கள் பூட்டும் போஸ்டர் காட்சி இடம்பெற்றுள்ளது.
One of the resident in my apartment is tested covid positive and so it’s self isolation for all of us in the building for the next 14 days.... #redzonepic.twitter.com/l1MaTP7UDm
— bindu madhavi (@thebindumadhavi) May 30, 2020
இந்த வீடியோ குறித்து நடிகை பிந்து மாதவி, தன்னுடைய அப்பார்ட்மெண்ட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நடிகை பிந்து மாதவியும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. பிந்து மாதவி தனிமைப்படுத்தப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பிந்து மாதவி தான் நலமாக இருப்பதாக ரசிகர்களுக்கு தெரியவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.