கோலிவுட்டில் தற்போது நடைப்பெற்று வரும் ஸ்டிரைக் காரணமாக நடிகர், நடிகைகள் பலர், பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், நடிகை பிந்து மாதவி தனது சொந்த ஊரிற்கு ஒரு விசிட் அடித்து வந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ’வெப்பம்’ திரைப்படத்தின் அறிமுகமான பிந்து மாதவி, சில படங்களிலேயே ரசிர்கள் மனதில் இடம்பிடித்தார். கோலிவுட் வட்டாரங்களில் சிலர் இவரை சின்ன சில்க் என்றும் அழைப்பர். படங்களின் மூலம் பிரபலமானதை விட, தனியார் தொலைக்காட்சியில் நடைப்பெற்ற 'பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிந்து ஃபேபஸ் ஆனார்.
அவரின் திரையுலக பயணம் தற்போது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸிற்கு முன், பிக் பாஸிற்கு பின். இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்கள் எல்லோரின் வாழ்க்கையும் தற்போது பெரியளவில் மாறியுள்ளது. அதே போல் பிந்துவிற்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்த வாய்ப்பை இம்முறை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர்,முன்னணி ஹிரோக்களின் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆனால், பல்வேறு காரணங்களால், தற்போது கோலிவுட்டில் ஸ்டிரைக் நடைப்பெற்று வருகிறது. இதனால், படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பிந்து, அவரின் சொந்த ஊரான, ஆந்திரப் பிரதேசத்திலுள்ள தேவரிந்தி பள்ளிக்கு சென்றுள்ளார்.
அங்கு சென்று, ஆடு மேய்ப்பது, மண் பானையில் சமைப்பது, கொளுத்தும் வெயிலில் ஊர் சுற்றுவது, குல தெய்வ பிராத்தனைகளை மேற்கொள்ளுவது என அசல் கிரமாத்து பெண்ணாகாகவே பிந்து வாழ்ந்துள்ளார். இதுக் குறித்து பிந்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருப்பது.
,
“ ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நகரத்தை விட்டு, தொலைத்தூரமாக அழகான கிராமத்தில் இத்தனை நாட்கள் இருந்தது. கிராமத்து மக்கள் எல்லாருமே எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் அன்போடு பழகினார்கள். நான் பள்ளி படித்த காலங்களில் கூட விடுமுறை கிடைத்தால் உடனே, ஊருக்கு ஓடிவிடுவேன். ஒவ்வொரு வருடமும் மறக்காமல் இங்கு வந்து விடுவேன்.
,
என்னுடைய பாட்டியின் சமையல் பிரமாதமாக இருக்கும், இங்கு வந்தால் நான் டையட் எல்லாம் மறந்து பிடித்தமான எல்லாவற்றையும் சாப்பிடுவேன். அதே போல் இங்கு இருக்கும் பள்ளிக்கு மறக்காமல் சென்று வருவேன். இந்த பள்ளியை என்னுடைய தாத்தா கிராமத்து மக்களுக்காக இலவசமாக கட்டித் தந்தார். அதனால் நானும் ஒரு டீச்சர் தான் . நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு சென்று எனக்கு தெரிந்த பாடங்களை மாணவர்களுக்கு சொல்லி தருவேன்” என்று பூரிப்புடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
,