Advertisment

இரண்டாம் குத்து, பிஸ்கோத்: ‘லீக்’ செய்து வீழ்த்திய ‘பைரசி வெப்சைட்’கள்

Irandam Kuthu Full Movie Leaked To Download By tamilrockers: இரண்டாம் குத்து, பிஸ்கோத் படங்களை பைரசி வெப்சைட்களில் பார்த்தார்களா? என்கிற கேள்வி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இரண்டாம் குத்து, பிஸ்கோத்: ‘லீக்’ செய்து வீழ்த்திய ‘பைரசி வெப்சைட்’கள்

Biskoth, Irandam Kuthu Full Movie Leaked To Download By tamilrockers: கொரோனா கொடுமைக்கு பிறகு முதல் முறையாக தியேட்டர் திரைகளைத் தொட்ட இரு படங்களையும் பைரசி வெப்சைட்கள் ‘லீக்’ செய்து வசூல் ரீதியான வீழ்த்தியிருக்கின்றன. ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் சினிமாத் துறைக்கு இது பெரும் மிரட்டலாகப் பார்க்கப்படுகிறது.

Advertisment

கொரோனா பாதிப்பால் சுமார் 8 மாதங்கள் முடங்கிக் கிடந்த சினிமா தியேட்டர்கள் இப்போதுதான் படங்களை திரையிட ஆரம்பித்திருக்கின்றன. தீபாவளி ரிலீசில் பெரிய படங்கள் என சொல்லத்தக்க சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் படங்களை ஓடிடி தளங்கள் கொத்திக்கொண்டு போய்விட்டன. தியேட்டர் ரிலீஸுக்கு வந்தவை இரண்டே இரண்டுதான். ஒன்று சந்தோஷ் ஜெயகுமார் நடித்து தயாரித்த இரண்டாம் குத்து, மற்றொன்று நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான பிஸ்கோத்.

Tamilrockers Leaked Biskoth, Irandam Kuthu Tamil Movies: பிஸ்கோத், இரண்டாம் குத்து 'லீக்’ செய்த தமிழ் ராக்கர்ஸ்

பெரும்பாலான தியேட்டர்கள் பழைய படங்களைப் போட்டு தீபாவளியை கொண்டாடிய சூழலில், இந்த இரு படங்களும் மட்டும் கொரோனாவுக்கு பிந்தைய முதல் இரு படங்களாக வந்தன. வழக்கம் போல படம் ரிலீஸான அன்றே தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பைரசி வெப்சைட்கள் இந்த இரு படங்களையும் முழுமையாகத் திருடி, தங்கள் இணையதளங்களில் வெளியிட்டன.

தியேட்டர்களுமே 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதற்கிடையில் பைரசி வெப்சைட்களின் தாக்கத்தாலும் இந்தப் படங்களின் வசூல் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அடல்ட்ஸ் காமெடியான இரண்டாம் குத்து படத்தின் முதல் இருநாள் வசூல் 3 கோடி ரூபாய் மட்டுமே என்கிறார்கள். பிஸ்கோத் படம் 8 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தைப் போல பெரும் வசூலை எதிர்பார்த்த சந்தோஷ் ஜெயகுமாருக்கு, இரண்டாம் குத்து ஏமாற்றத்தையே கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் உயர்வு, பார்க்கிங் கட்டணம் உள்ளிட்ட பிடுங்கல்களால் பைரசி வெப்சைட்கள் பக்கம் பார்வையை திருப்பிய ரசிகர்கள், இந்த பேன்டமிக்கை சாக்காக வைத்துக்கொண்டு பெருமளவில் அங்கே தாவிவிட்டார்களோ? என நினைக்கத் தோன்றுகிறது.

அதுவும் இரண்டாம் குத்து மாதிரியான அடல்ட்ஸ் காமெடி படத்தை தியேட்டரில் சென்று பார்ப்பதைவிட, திருட்டுத்தனமாக பார்ப்பதை வசதியாக ரசிகர்கள் உணர்ந்தார்களா? எனத் தெரியவில்லை. எனினும் இது எதிர்காலத்தில் தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்ய நினைக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஊக்கம் தரும் செய்தி அல்ல.

ஓடிடி-யில் வெளியான சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் திரைப்படங்களையும் பைரசி வெப்சைட்கள் சுட்டபோதும், அவை ஓடிடி தளத்திலும் கணிசமான பார்வையாளர்களை பெற்றன. எனவே பேண்டமிக் நேரத்தில் தியேட்டர் செல்ல விரும்பாத கூடுதல் ரசிகர்கள் இரண்டாம் குத்து, பிஸ்கோத் படங்களை பைரசி வெப்சைட்களில் பார்த்தார்களா? என்கிற கேள்வி வருகிறது. திரையுலகிற்கு இது நல்லதல்ல.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Tamil Movie Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment