Bison Kaalamaadan Movie Review highlights: படைப்பியலின் அற்புதம் – பைசன் காளமாடன்; ரசிகர்கள் விமர்சனம்

'Bison Kaalamaadan' Tamil Movie Release and Review Live Updates: மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடித்துள்ள 'பைசன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

'Bison Kaalamaadan' Tamil Movie Release and Review Live Updates: மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடித்துள்ள 'பைசன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
bison movie

பட்டை தீட்டப்பட்ட வைரம்தான் பைசன் - ரசிகர்கள் ரிவ்யூ

Bison Kaalamaadan Movie Review Live Updates: மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடித்துள்ள 'பைசன்' திரைப்படம் இன்று (அக்டோபர் 17, 2025) திரையரங்குகளில் வெளியானது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. 

Advertisment

அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக வைத்து 'பைசன்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் துருவ் விக்ரமுடன் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

விக்ரமின் மகன் துருவ் நடித்திருக்கும் பைசன் திரைப்படம் இன்று வெளியாகவிருக்கிறது. நேற்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவருமே கொண்டாடிவருகிறார்கள்.  

  • Oct 17, 2025 16:27 IST

    என் உழைப்புக்கு வெற்றி கிடைத்திருக்கிறது - மாரி செல்வராஜ்

    சென்னையில் ரசிகர்களுடன் இணைந்து தான் இயக்கிய பைசன் படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டுரசித்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், நினைத்தது நடந்ததா? ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு? என்று கேள்வி எழுப்பப்பட்டது. என் உழைப்புக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. ரசிகர்கள் படத்தை நன்றாக வரவேற்றுள்ளனர் என்று கூறினார்.



  • Oct 17, 2025 16:24 IST

    ”பசுபதியின் நடிப்பு அபாரம்; துருவ் உடல் உழைப்பு பிரமாதம்”

    பைசன் படத்தில் பசுபதியின் நடிப்பு விருதை வெல்லும் அளவுக்குச் சிறப்பாக உள்ளது. துருவ் விக்ரமின் உடல் உழைப்பு, ரஜிஷாவின் நடிப்பு ஆகியவை நன்றாகவும் கவரக்கூடியதாகவும் இருக்கின்றன. பின்னணி இசை (BGM), பாடல்கள் மற்றும் ஒளிப்பதிவு (Visuals) ஆகியவை மிக உயர்ந்த தரத்தில் (Top Notch) உள்ளன. படத்தின் உருவாக்கமும் (Making) மிகச் சிறப்பானது. வன்முறை (Violence), வேகக் குறைவு (Pace) மற்றும் திரும்பத் திரும்ப வரும் சில காட்சிகள் ஆகியவை படத்தின் பலவீனமான அம்சங்களாக உள்ளன. படத்தின் இறுதிக் கபடிப் போட்டி மற்றும் உணர்ச்சிபூர்வமான கிளைமாக்ஸ் ஆகியவை மிகப் பெரிய அளவில் கைகொடுத்துள்ளன. இயக்குநர் மாரி செல்வராஜுக்குப் பாராட்டுகள் என்று திரைப்பட விமர்சகர்கள் கூறி உள்ளனர்.



  • Advertisment
    Advertisements
  • Oct 17, 2025 16:22 IST

    டீசல், பைசன், டியூட் படக்குழுவினருக்கு ரவிமோகன் வாழ்த்து

    இன்றைய இளைஞர்களின் உற்சாகமான சக்தியுடன் உருவாகி வரும் #Dude, #Diesel, மற்றும் #Bison திரைப்படங்களின் துடிப்பான குழுவினருக்குப் படங்களின் மாபெரும் வெற்றிக்காக தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று நடிகர் ரவி மோகன் கூறி உள்ளார். இந்தத் தீபாவளியை முன்னிட்டு, அனைத்து படக் குழுவினரும் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற வாழ்த்துகிறோம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.



  • Oct 17, 2025 14:32 IST

    துருவ் விக்ரமின் அசுர நடிப்பு - ரசிகர்கள் பாராட்டு

    பைசன் படத்தில் கதாநாயகன் துருவ் விக்ரம், அந்த கதாபாத்திரமாகவே மாறி, தனது திரை வாழ்க்கையின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அவர் வலியை, கோபத்தை, அன்பை வெளிப்படுத்தும் விதம் அசாத்தியமானது. அந்த கதாபாத்திரத்துக்குள் அவர் ஐக்கியமானது போலிருக்கும் அவரது நடிப்பு, ரசிகர்களின் இதயத்தை அனலாய் தீண்டுகிறது. இந்த திரைப்படம், போராட்ட குணம், சுய அடையாளம், மற்றும் வெற்றி ஆகியவற்றைக் கொண்டாடும் ஒரு திரையரங்க அனுபவம்! 'பிசன் காலமடன்' கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படமாகும் என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



  • Oct 17, 2025 14:22 IST

    பட்டை தீட்டப்பட்ட வைரம்தான் 'பைசன்' - ரசிகர்கள் ரிவ்யூ

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பைசன் காலமடன்' திரைப்படம், பட்டை தீட்டப்பட்ட வைரம்போல, ஆழமான உணர்ச்சிகளையும் சமூகத்தின் மீதான கேள்விகளையும் ஒருசேர எழுப்பும் அற்புதமான, வீரியமிக்க விளையாட்டுத் திரைப்படமாக (Sports Drama) வெளி வந்துள்ளது உள்ளதாக எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். சாதி, அரசியல் மற்றும் உணர்ச்சிப் பிணைப்பு ஆகிய முக்கோணப் புள்ளிகளைச் சமநிலையுடன், அதே சமயம் அழுத்தமாக இப்படம் கையாண்டிருப்பதில் மாரி செல்வராஜ் ஒரு மாஸ்டர் கிளாஸை வழங்கியுள்ளார்.



  • Oct 17, 2025 14:05 IST

    பசுபதி நடிப்பு, கபடி காட்சிகள் சிறப்பு - ரசிகர்கள் விமர்சனம்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள பைசன் படம் இன்று திரையில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், தற்போது படம் தொடர்பான விமர்சனங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், படத்தில் துருவின் நுட்பமான நடிப்பு நன்றாக இருக்கிறது என்றும், சண்டைக்காட்சிகள் மற்றும் பேருந்து காட்சி கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் ரசிகர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும்  பசுபதியின் தரமான நடிப்பு வலு சேர்கிறது என்றும், துருவ் விக்ரம் ஆடும் கபடி காட்சிகள் சிறப்பாக படம் பிடிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 



  • Oct 17, 2025 13:25 IST

    சக்திவாய்ந்த கதை - ரசிகர் புகழாரம் 

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள பைசன் படம் இன்று திரையில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், தற்போது படம் தொடர்பான விமர்சனங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், "மாரி செல்வராஜ் அற்புதமான படத்தை வழங்கி இருக்கிறார். சக்திவாய்ந்த கதை மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்களுடன் தனது கடந்த கால குறைபாடுகளை செம்மைப்படுத்துகிறார்" என்று ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.



  • Oct 17, 2025 13:12 IST

    இடைவேளைக்குப் பிந்தைய கபடி போட்டி 'பக்கா மாஸ்' - ரசிகர்கள் விமர்சனம்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள பைசன் படம் இன்று திரையில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், தற்போது படம் தொடர்பான விமர்சனங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வருகிறது. இது பற்றி ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், 'இடைவேளைக்குப் பிந்தைய கபடி போட்டி பக்கா மாஸ்' கூறியிருக்கிறார். 



  • Oct 17, 2025 11:34 IST

    பைசனுக்கு வரவேற்பு - திருநெல்வேலியில் களைக்கட்டிய கொண்டாட்டம்

    இயக்குனர் மாரி செல்வராஜின் சொந்த ஊரான திருநெல்வேலியில் அவரது ரசிகர்கள் மற்றும் படத்தில் நடித்த கலைஞர்கள் பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுடன் 'பைசன்’ திரைப்படத்தை வரவேற்றனர். வான வேடிக்கை, மேளதாளங்கள் முழங்க, ரசிகர்கள் உற்சாக நடனத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 



  • Oct 17, 2025 10:50 IST

    பைசன் ரிலீஸ் - உற்சாகமாக படம் பார்க்க வந்த விக்ரம்

    மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தனது மகன் துருவ் விக்ரம் நடித்த படித்தை பார்க்க நடிகர் விக்ரம் உற்சாகமாக திரையரங்கிற்கு வருகை தந்தார்.



  • Oct 17, 2025 10:23 IST

    இது உங்களுக்கான நேரம் துருவ் விக்ரம் - பா.இரஞ்சித் வாழ்த்து

    ’பைசன்’ திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் பா.இரஞ்சித் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், மாரிசெல்வராஜின் மற்றொரு மைல்கல்லிற்கு வாழ்த்துகள். இது உன் நேரம் துருவ் விக்ரம். எங்களை போலவே ரசிகர்கள் நீங்களும் இந்த படத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்று வெளியான ’டியூட்’, ‘டீசல்’ படத்திற்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

     



  • Oct 17, 2025 09:34 IST

    பைசன் - வலைப்பேச்சு அந்தனன் எக்ஸ் பதிவு

    பைசன் - படைப்பியலின் அற்புதம். இந்திய சினிமாவின் பெருமை ! - என வலைப்பேச்சு அந்தனன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

     

     



  • Oct 17, 2025 09:21 IST

    மாரி செல்வராஜ் எக்ஸ் பதிவு

    அடுத்த தலைமுறையை பெரும் ஆரவாத்தோடு வரவேற்கும் இந்த தீபாவளி எல்லாருக்கும் சிறக்கட்டும் என மாரி செல்வராஜ் புதிதாக வெளியாகும் படங்களை பற்றி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Oct 17, 2025 09:00 IST

    ஈர்க்கக்கூடிய திரைப்படம் - சித்தார்த் ஸ்ரீநிவாஸ் பதிவு

    பைசன் (3.5/5) - சாமர்த்தியமான மற்றும் மிகவும் ஈர்க்கக்கூடிய திரைப்படம். மாரி செல்வராஜ் மீண்டும் ஒருமுறை சாதியை மையப்படுத்திய ஒரு நாடகத்தை இந்த முறை ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு அம்சத்துடன் வழங்கியுள்ளார். முதல் பாதி சுமாராக உள்ளது, ஆனால் இரண்டாம் பாதியில் சில சுவாரஸ்யமான காட்சிகள் மற்றும் மையக்கருத்தை உயர்த்திப் பிடிக்கும் ஒரு அழுத்தமான கிளைமாக்ஸ் உள்ளது. இது நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், சில இடங்களில் சாதாரணமாகத் தோன்றினாலும், முடிவில் சில கைதட்டல் நிறைந்த தருணங்களை அது உறுதி செய்கிறது.

    துருவ்விக்ரம் மிக நேர்மையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், அவரது உடல் அவரது முகத்தைப் போலவே நடிக்கிறது - இது அவருக்கு சரியான திசையில் ஒரு நம்பிக்கைக்குரிய புதிய தொடக்கம். அடுத்தபடியாக, மூத்த நடிகரான பசுபதியின் நடிப்பு மிகச்சிறப்பாக உள்ளது. ராஜாஷா விஜயன் தனது உணர்ச்சிகள் மற்றும் வசனங்களில் மீண்டும் வலுவாக இருப்பது எனக்குப் பிடித்திருந்தது, மேலும் அனுபமா-க்கும் ஒரு நல்ல பாத்திரம் கிடைத்துள்ளது. அமீர் மற்றும் லால் ஓரளவுக்கு நன்றாகச் செய்துள்ளார்கள்.

    படத்தின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக உள்ளது மற்றும் நிவாஸின் இசை மிகவும் நன்றாக உள்ளது, ஆனால் கதைக்களம் மாரியின் களத்தில் மீண்டும் வருவதைப் போல் உணர்வதால், அது சற்று குறைக்கிறது. மொத்தத்தில், பைசன் எனக்குப் பிடித்திருந்தது. இது மாரியின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அதன் கிராமிய கதை சொல் விதம், துருவ்வின் நடிப்பு மற்றும் கிளைமாக்ஸ் ஆகியவற்றால் நிச்சயம் வெற்றி பெறுகிறது! - என எக்ஸ் பக்கத்தில் சித்தார்த் ஸ்ரீநிவாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Oct 17, 2025 08:29 IST

    இரட்டை மன மனிதர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் நண்பர் மாரி செல்வராஜ்

    அழகியலோடு காட்டப்படும் கிராமம். உள்ளுக்குள் சாதிய சாக்கடையை ஊறல் போட்டுக்கொண்டு, வெளியில் வெள்ளை வேட்டி சட்டையை உடுத்தியிருக்கும் இரட்டை மன மனிதர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார் நண்பர் மாரி செல்வராஜ் - என பத்திரிக்கை விமர்சகர் தேனி கண்ணன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். 

    பைசன் விமர்சனம்



  • Oct 17, 2025 08:26 IST

    திரைப்பட பத்திரிக்கையாளர் ரிங்கு குப்தா பதிவு

     



  • Oct 17, 2025 08:23 IST

    நம்ம கொடுக்குற டிக்கெட் காசு துருவ் ஆடுவதற்கே சரியாபோயிடும்

    நம்ம கொடுக்குற டிக்கெட் காசு தெக்குலுதை பாடலில் துருவ் ஆடுவதற்கே சரியாபோயிடும் அப்படி ஒரு எனர்ஜி - என துணை இயக்குநர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Oct 17, 2025 08:21 IST

    பத்திரிக்கையாளர் அவினாஷ் ராமச்சந்திரன் பதிவு

     துருவ் கோபமான இளைஞனாக மிகவும் திறம்பட நடிக்கிறார், மேலும் அதிகமான திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவருக்கு அவரது ஓவரை விரிவுபடுத்த அனுமதிக்கும் பாத்திரங்களை வழங்குவதைக் காண்கிறோம் என்று நம்புகிறேன்.#RajishaVijayan ஆசிரியர் ஆதரவு பாத்திரத்தைப் பெறுகிறார், அவள் அதை வழங்குகிறாள்! #AnupamaParameswaran சூரியனின் கீழ் தனது தருணத்தைப் பெறுகிறார், ஆனால் ஒரு வளர்ச்சியடையாத கதாபாத்திரத்தால் பெரும்பாலும் நீக்கப்பட்டதாக உணர்கிறார் நேசித்தார் - என எக்ஸ் பக்கத்தில் அவினாஷ் ராமச்சந்திரன் பதிவிட்டுள்ளார்.



  • Oct 17, 2025 08:17 IST

    பத்திரிக்கையாளர் கவிதா திரைப்பட விமர்சனம்

    உண்மையாக நடிக்கும் துருவ்... என்ன ஒரு ஆற்றல்... தந்தையைப் போல மகன்.. வாழ்த்துக்கள்.. - என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • Oct 17, 2025 08:16 IST

    கார்த்திக் ரவிவர்மா விமர்சனம்

    1 வது பாதி சரி 2 வது பாதி உணர்ச்சி மற்றும் கபடி போட்டிகளில் நன்றாக வேலை செய்தது... துருவ் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர். பசுபதில் கதாபாத்திரங்கள் நன்றாக உள்ளன இசை சூப்பர் நல்லது என்று திரைப்பட விநியோகஸ்தர் கார்த்திக் ரவிவர்மா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Oct 17, 2025 08:12 IST

    2025 சிறந்த படங்களில் ஒன்றாகும்

    மாரி செல்வராஜின் பைசன் படத்தில் நடிகர் கயல் தேவராஜ், 2025 ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாகும் சிறந்த நடிப்பு என்றும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

     

     

    விக்ரம் சார் எட்டடி பாய்ந்தால் அவரது மகன் பதினாறு அடி பாய்ந்து, படம் முழுக்க நடிப்பில் பட்டையைக் கிளப்பி இருக்கிறார்.



  • Oct 17, 2025 08:10 IST

    பத்திரிக்கையாளர்களுக்கான காட்சி

    விக்ரமின் மகன் துருவ் நடித்திருக்கும் பைசன் திரைப்படம் இன்று வெளியாகவிருக்கிறது. நேற்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவருமே கொண்டாடிவருகிறார்கள்.  



  • Oct 17, 2025 08:10 IST

    உண்மை கதையை மையமாக வைத்து உருவான படம்

    அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் நிஜ வாழ்க்கைச் சம்பவங்களை மையமாக வைத்து 'பைசன்' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் துருவ் விக்ரமுடன் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். 



  • Oct 17, 2025 08:09 IST

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன்

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடித்துள்ள 'பைசன்' திரைப்படம் இன்று (அக்டோபர் 17, 2025) திரையரங்குகளில் வெளியானது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன. 



Tamil Movie Review Tamil Movie Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: