நடிகை, தயாரிப்பாளர், அரசியல் பிரமுகர், எழுத்தாளர், தொகுப்பாளர், ஆக்டிவிஸ்ட் என பல முகங்களை கொண்டவர் குஷ்பு. 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
சமீப காலமாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் களமிறங்கிய நடிகை குஷ்பு, கடின் வொர்க்கவுட்டால் அதனை சாதித்து காட்டியுள்ளார். தற்போது, ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படங்களை, சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்.

இதற்கிடையில், தற்போது லண்டன் சென்றுள்ள குஷ்பு, அங்கிருந்தப்படியே சில போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.கறுப்பு நிற குட்டி கவுன் அணிந்துள்ள நடிகை குஷ்புவின் போட்டோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ஒருசிலர் குஷ்புவை பாராட்டினால், சிலர் குஷ்பு ரொம்ப ஒல்லியானதால் அவரது அழகே பொய்விட்டதாக ட்ரோல் கமெண்ட்களும் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், பாஜக மாநிலப் பொருளாளர் எஸ். ஆர் சேகர் குஷ்பூவின் புகைப்படத்தை கண்டு அவரின் Transformation ரகசியம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அந்த பதிவில், உலகப் பெண்களுக்கு குறிப்பாக தமிழ்ப்பெண்களுக்கு உங்களிடம் புதைத்து வைத்திருக்கும் ஒரே ஒரு உண்மையை மட்டும் சொல்லமுடியுமா? உங்களுக்கு வருடங்கள் ஓட ஓட வயது குறைகிறதே? இதன் ஓட என்ன? சொன்னால் எத்தனை பெண்கள் மகிழ்ச்சி அடைவர் பயன்பெறுவர் கணவன்மார்கள் சந்தோஷம் அடைவர் சொல்வீர்களா?’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த குஷ்பூ ‘ஹாஹா சார் ‘ என்று கையெடுத்து கும்பிடும் ஸ்மைலிகளை பதிவிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil