Iravin Nizhal movie Tamil News: பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் ‘உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட்’ திரைப்படம் என்ற பெருமையுடன் வெளியாகியுள்ளது. ஆனால் இது முதல் திரைப்படம் இல்லை எனவும், இதற்கு முன் ஈரானிய படம் அப்படி வந்துள்ளது என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருந்ததற்கு பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ‘இரவின் நிழல்’ உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், ஈரானிய திரைப்படமான ‘ஃபிஷ் அண்ட் கேட்’ (Fish and cat) 2மணி நேரம் 20 நிமிடம் கொண்ட அந்தபடம் தான் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்று கூறியுள்ளார்.

இதற்கு பார்த்திபன் பதிலடி கொடுத்து பேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ” Googleயில் அவர் சொல்லும் படம் நான் லீனியர் வரிசையில் இல்லை. திரைப்பட விமர்சகர் சைபல் சாட்டர்ஜி உள்ளிட்ட பலரிடம் படம் காட்டி உறுதி செய்துக் கொண்டேன். குறைந்த பட்சம் ஒரு வருடமாக இப்படத்தை ‘the world’s first non-linear single shot movie’ என விளம்பரப்படுத்தி வரும் என்னிடம் அவரே இப்படி ஒரு படம் இருப்பதாக சொல்லியிருக்கலாம். spl show பார்க்க அழைத்தேன். அப்போதாவது என்னிடம் இதை சொல்லி என்னைத் திருத்தி, மக்களை நான் ஏமாற்றுவதைத் தடுத்து இருக்கலாம். அவர் படம் பார்க்க போகவில்லை என்பதென் வருத்தமே. விமர்சகர் என்பதை மீறி இயக்குநர் என்பதால் இன்றும் அவர் மீது மரியாதை உள்ளது ” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil