'கிங்காங்' வீட்டு கல்யாணத்தில் ஆப்சென்ட்: 'சக திரைக் கலைஞரை மதிக்கும் லட்சணம் இதுதான்' - வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை

நகைச்சுவை நடிகர் 'கிங்காங்' சங்கரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னணி சினிமா பிரபலங்கள் பங்கேற்காததை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் 'கிங்காங்' சங்கரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னணி சினிமா பிரபலங்கள் பங்கேற்காததை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Blue Sattai Maran on top starts from Tamil cinema industry not attending King Kong Shankar daughter marriage News in Tamil

நகைச்சுவை நடிகர் 'கிங்காங்' சங்கரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னணி சினிமா பிரபலங்கள் பங்கேற்காதது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு பெயர்போனவர் நடிகர் கிங்காங். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், நடிகர் ரஜினிகாந்தின் 'அதிசயபிறவி' படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

Advertisment

'கிங்காங்' சங்கருக்குத் திருமணமாகி கலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், மகன் ஒருவரும் உள்ளனர். இந்நிலையில், நடிகர் கிங்காங் மகள் திருமணம் இன்று நடைபெற்றது. அசோக் பில்லர் பகுதியில் இருக்கும் மஹாலில் இத்திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் கிங்காங்கின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் வரவில்லை. 

அரசியல் தலைவர்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். இதேபோல், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார், பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில், 'கிங்காங்' சங்கரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னணி சினிமா பிரபலங்கள் பங்கேற்காதது பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. அவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களின் வீட்டிற்கே நேரில் சென்று அழைப்பு கொடுத்த நிலையில், பலரும் நிகழ்வை தவிர்த்து இருப்பதற்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

Advertisment
Advertisements

இந்த நிலையில், 'கிங்காங்' சங்கரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னணி சினிமா பிரபலங்கள் பங்கேற்காததை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "கிங்காங்' சங்கர் எனும் முன்னுதாரணம்:

உயரம் குறித்த ஏளன பேச்சுகள் அனைத்தையும் தகர்த்து முன்னேறிய நடிகர். நகைச்சுவை மட்டுமின்றி..  வெகுஜனங்களை ‌ஈர்க்கும் நடனத்திலும் கெட்டிக்காரர். சினிமா வாய்ப்பு இல்லாத நேரங்களில் ஊர் ஊராக சென்று.. தனது கலைக்குழுவை வைத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். சிறுகச்சிறுக சேமித்த‌பணத்தில் சென்னையின் மையப்பகுதியில் சொந்ந வீடு கட்டியவர். ரஜினி, கமல், ஷாருக் கான் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும நடித்தவர்.

தனது முதல் மகளின் திருமணத்திற்கு வருமாறு பல சினிமா பிரபலங்களுக்கு நேரில்ஸ அழைப்பு விடுத்தார். ஆனால் சொல்லி வைத்தது போல பலரும் போகவில்லை. காரணம்: இவர் ஒரு சாதாரண நகைச்சுவை நடிகர், உயரம் குறைவானவர், செல்வந்தர் இல்லை. பல கிலோமீட்டர் பயணித்து நேரில் பத்திரிக்கை வைத்தவரை மதித்து.. திருமணத்திற்கு செல்ல ஒரு சினிமா நட்சத்திரத்திற்கு கூடவா மனம் வரவில்லை?

சக திரைக்கலைஞரை இவர்கள் மதிக்கும் லட்சணம் இதுதான். ஆனால் ஆடியோ லாஞ்ச் மேடைகளில் மனிதநேயம், சமத்துவம் பற்றி இந்த யோக்கியர்கள் பேசி அறுப்பார்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் திருமண வரவேற்பில் கலந்து கொண்டது.. கிங்காங் சங்கருக்கு மனநிறைவாக இருந்திருக்கும். உங்கள் சக்திக்கு மீறி பல விசயங்களை சாதித்து இச்சமூகத்திற்கு முன்னுதாரணமாய் திகழ்கிறீர்கள் சங்கர். உங்கள் வெற்றிப்பயணம் தொடரட்டும்." என்று அவர் கூறியுள்ளார். 

Tamil Cinema Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: