/indian-express-tamil/media/media_files/2025/10/04/mandadi-movie-shooting-accident-2025-10-04-22-25-55.jpg)
சூரி படப்பிடிப்பில் பரபரப்பு: கடலில் படகு கவிழ்ந்து விபத்து; கேமராக்கள் மூழ்கியதால் ரூ. 1 கோடி நஷ்டம்!
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடற்பகுதியில், நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் “மண்டாடி” திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், உயிர் சேதம் ஏதும் இன்றி படக்குழுவினர் மீட்கப்பட்டபோதிலும், சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான படப்பிடிப்பு உபகரணங்கள் கடலில் மூழ்கியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நகைச்சுவை நடிகராக தொடங்கி தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ள சூரி, இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் “மண்டாடி” திரைப் படத்தில் நடித்து வருகிறார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், மகிமா நம்பியார் கதாநாயகியாகவும், சுஹால் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பை மேற்கொள்கிறார்.
இந்த நிலையில், தொண்டி கடற்பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, படக்குழுவினர் சென்ற படகு திடீரென கடலில் கவிழ்ந்தது. இதனால், படகில் இருந்த இருவர் கடலில் மூழ்கிப் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், அவர்களை உடனடியாக மீட்கப்பட்டு உயிர் பிழைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. ஆனாலும், படகுடன் சேர்ந்து கேமராக்கள் உள்ளிட்ட பல முக்கியப் படப்பிடிப்பு உபகரணங்கள் கடலில் மூழ்கிவிட்டன. இதன் காரணமாக, தயாரிப்பு நிறுவனத்திற்கு சுமார் ரூ. 1 கோடி மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.