'அவர் மிகவும் இனிமையானவர், பணிவாக பழகக் கூடியவர்': விஜய்யுடனான தனது அனுபவம் குறித்து மனம் திறந்த பாபி தியோல்

பாபி தியோல், தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
Bobby and Vijay

நடிகர் விஜய் மிகவும் இனிமையானவர் என்றும், எளிமையாக நடந்து கொள்பவர் என்றும் பாபி தியோல் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Bobby Deol on his Jana Nayagan co-star Vijay: ‘He is a sweetheart…very simple, down to earth’

 

Advertisment
Advertisements

ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தில், பாபி தியோல் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடப்போவதை தொடர்ந்து, 'ஜனநாயகன்' அவரது கடைசி திரைப்படம் என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் ஜெய்ப்பூரில் IIFA விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பாபி தியோல் கலந்து கொண்டார். அப்போது நடிகர் விஜய் குறித்து தனது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். அதன்படி, "விஜய் மிகவும் இனிமையானவர். அவர் எளிமையாக நடந்து கொள்வார். எல்லோரிடமும் பணிவாக நடந்து கொள்ளும் பண்பு விஜய்யிடம் இருக்கிறது" என அவர் கூறியுள்ளார்.

 

 

முன்னதாக, தமிழில் 'கங்குவா' மற்றும் தெலுங்கில் 'டாக்கு மகாராஜ்' ஆகிய படங்களில் பாபி தியோல் நடித்துள்ளார். பல மொழிகளில் பணியாற்றும் போது மொழி மட்டுமே மாறுபடுவதாகவும், மற்ற அனைத்தும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சவால் நிறைந்த பாத்திரங்களில் நடிக்க தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மூத்த நடிகர் தர்மேந்திராவின் இளைய மகனும், நடிகர் சன்னி தியோலின் சகோதரருமான பாபி தியோல்,1995 ஆம் ஆண்டு வெளியான 'பர்சாத்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

"கடவுள் மிகவும் இரக்கமுள்ளவர். கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர்கள் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். என் தந்தையால் தான், எனக்கு இவ்வளவு அன்பு கிடைக்கிறது என்று நினைக்கிறேன். நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். நான் பெறும் ஒவ்வொரு விருதும் என் ரசிகர்களுக்காக தான்" என அவர் தெரிவித்துள்ளார்.

ஓ.டி.டி தளங்கள் தனக்கு பெரிதும் உதவியாக இருந்ததாக பாபி தியோல் கூறியுள்ளார். 2020-ஆம் ஆண்டில் நெட்ஃபிக்ஸ் திரைப்படமான 'கிளாஸ் ஆஃப் 83' மற்றும் எம்.எக்ஸ் பிளேயரின் ஆஷ்ரம் தொடரில் பாபி தியோல் நடித்துள்ளார்.

Actor Vijay H Vinoth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: