செலிபிரிட்டி பிராண்ட் தரவரிசையில் நடிகர் அக்ஷய் குமார், தீபிகா படுகோனை வீழ்த்தி தனது வேல்யூவை 104.5 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியுள்ளதாக புதன்கிழமை வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
237.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்துள்ளார் என்று, ’டஃப் அண்ட் பெல்ப்ஸின் பிரபல பிராண்ட் மதிப்பீட்டு அறிக்கை 2019’ தெரிவித்துள்ளது.
ஹாய் கைய்ஸ் : பிரியா பவானி சங்கர் இனி போலீஸ் பவானி சங்கர் – மாபியா அட்டகாசம்
கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த தீபிகா படுகோனே 93.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் இந்தாண்டு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதே நேரத்தில் நடிகர் அக்ஷய் குமார் தீபிகாவின் இடத்தைப் பிடித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு எதிராக ஜே.என்.யுவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு, அவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார் தீபிகா. இதனால் பலரின் கோபத்துக்கு ஆளானார். அதே நேரத்தில் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறுவதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை பேட்டி கண்டதற்காக தலைப்பு செய்திகளில் இடம் பெற்றார் அக்ஷய் குமார்.
தீபிகா படுகோனே மற்றும் அக்ஷய் குமார் இருவருமே இந்த ஆண்டில் பிரபலமான பட வெளியீடுகளைக் கொண்டிருந்தனர். கடந்த ஆண்டு நான்காவது இடத்தில் இருந்த தீபிகாவின் கணவரும், நடிகருமான ரன்வீர் சிங்குடன் இந்தாண்டு மூன்றாம் இடத்தைப் பகிர்ந்துள்ளார், பாலிவுட்டின் இந்த முன்னணி நடிகை.
ஷாருக் கான், சல்மான் கான் ஆகியோர் 5 மற்றும் 6-ம் இடங்களைத் தக்க வைத்துள்ளனர். இவர்களின் பிராண்ட் மதிப்புகள் முறையே 66.1 மில்லியன், 55.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அமீர்கான் தரவரிசையில் 16-வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார். இவரின் மொத்த மதிப்பு 24.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இவர் கடந்த ஆண்டு 11 வது இடத்தைப் பிடித்திருந்தார்.
பாலிவுட்டின் மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் தரவரிசையும் சரிந்துள்ளது. அதாவது ஏழாவது தரவரிசையில் இருந்து 42.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் எட்டாவது இடத்திற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். அந்த 7-ம் இடத்தை ஆலியா பட் பிடித்துள்ளார், அவரின் மதிப்பு 45.8 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
நம்பிக்கையூட்டும் அலசல்: பெண்கள் கர்ப்ப காலத்தில் அலுவலகப் பணிகளை தொடர முடியாதா?
ஆர்ட்டிக்கிள் 15 நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா 40.3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் 10 வது இடத்திலும், ஜாக்கி ஷெராப்பின் மகனும் நடிகருமான டைகர் ஷெராப் 17 வது இடத்தில் 24.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடனும், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா 20-வது இடத்திலும் உள்ளனர். இவர்கள் இந்தப் பட்டியலில் புதிதாக இடம் பிடித்துள்ளனர்.