பாலிவுட்சினிமாவின் காட்பாதர் என்று போற்றப்படும் அமிதாப் பச்சனுக்கும், அவரின் மகன் அம்பிஷேக் பச்சனுக்கும் நேற்று இரவு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்
இந்நிலையில், தனது தாயார் மற்றும் அண்ணன் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மற்றொரு பாலிவுட் நடிகரான அனுபம் கெர் தெரிவித்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில்," எனது தாயார் துல்ஹரி, சகோதரர் ராஜு, அண்ணி ரிமா மற்றும் மருமகள் பிருந்தா ஆகியோர் கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர்" என்று தெரிவித்தார்.
ட்விட்டர் பதிவில், "எனக்கு கொரோனா நோய்த் தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்தது. ஆனால், என் குடும்ப உறுப்பினர்கள் சிலர் இந்த நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அனைவரின் உடல்நிலையும் சீராக ஊள்ளது என்றும்,அனைவரும் மிதமான பாதிப்பு உள்ளவர்களாக கருதப்படுகின்றனர்" என்று தெரிவித்தார்.
அனுபம் கெரின் தாயார் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் தங்கள் வீட்டிலேஏ தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர் என்றும் அனுபம் கெர் தெரிவித்தர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil