Advertisment

நாய்களுக்கு சொத்தை எழுதி வைத்த பாலிவுட் நட்சத்திரம்: காரணம் என்ன தெரியுமா?

நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி தனது நாய்களை பாதுகாப்பதற்காக சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mithun Chakrabirthy
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நாய்ககள் மீது அதிக பிரியம் வைத்திருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, தனது நாய்களை பராமறிப்பதற்காகவே ரூ45 கோடியில் சொத்து எழுதி வைத்துள்ளார் என்ற தகவல் தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisment

பாலிவுட் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் மிதுன் சக்ரவர்த்தி. 1970-களில இந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், முன்னணி நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வந்தவர். மேலும் 2014-2016 காலக்கட்டத்திரல் ராஜ்யசபா உறுப்பினரக இருந்த மிதுன் சக்ரவர்த்தி, சமீபத்தில் இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை பெற்றிருந்தார்.

நடிகர், தயாரிப்பாளர், அரசியல் பிரபலம் என இந்தியாவின் முன்னணி பிரபலமாக இருக்கும் மிதுன் சக்ரவர்த்தி, செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர் என்றாலும், நாய்கள் மீது அதிக பிரியம் கொண்டவர். நாய்களுக்காகவே தனியாக இடம் ஒதுக்கியுள்ள மிதுன், 100-க்கு அதிகமான நாய்களை வளர்த்து வருகிறார். உலகில் எந்த பகுதிக்கு சென்றாலும் அங்கிருந்து நாய்களை வாங்கி வருவதை வழக்கமான வைத்திருக்கும் மிதுன், சுற்றுலா செல்லும்போது அந்த நாய்களையும் தன்னுடன் அழைத்து செல்வது வழக்கம்.

தன்னிடம் இருக்கும் நாய்களை பராமரிப்பதற்காகவே, மும்பைக்கு அருகெ உள்ள மிட் தீவில், 1.5 ஏக்கரில் பெரிய பண்ணை வீ்ட்டை உருவாக்கியுள்ள மிதுன், நாய்களை பராமரிப்பதற்காக தனியாக வேலை ஆட்களையும் நியமித்துள்ளார். இங்கு ஒவ்வொரு நாய்க்கும் தனி அறை, விளையாட்டு மைதானம், மருத்துவ வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ள மிதுன் சக்ரவர்த்தி, இங்கு நாய்களை பாதுகாப்பதற்காகவே ரூ45 கோடி மதிப்பில் சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்.

இந்த தகவலை மிதுன் சக்ரவர்த்தி மருமகள், மதால்சா சர்மா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், செல்லப்பிராணிகளுக்காக மிதுன் சக்ரவர்த்தி செய்த இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment