விஜயுடன் நடிக்க ஆசை; ஆனா லோகேஷ் என்னை வீணடித்து விட்டார்: 'லியோ' ஆண்டனி தாஸ் ஆதங்கம்!

'கே.டி - தி டெவில்' திரைப்படம், டீசர் வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் சஞ்சய் தத்தின் பான்-இந்தியா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'கே.டி - தி டெவில்' திரைப்படம், டீசர் வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் சஞ்சய் தத்தின் பான்-இந்தியா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Vijay Sanjay Dutt

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத், தற்போது பான் இந்தியா நடிகராக மாறியுள்ள நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'லியோ' படத்தில் தனது கேரக்டர் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தளபதி விஜய் நடித்த இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் தன்னை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்று அவர் கூறியது திரையுலக வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisment

கே.ஜி.எஃப் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கவனம் ஈர்த்த நடிகர், அடுத்து 'கே.டி - தி டெவில்'   என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை பல்லவன் ஹாலில் 'கே.டி - தி டெவில்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய  சஞ்சய் தத் 'லியோ'வில் பணிபுரிந்த தனது அனுபவம் குறித்துப் பேசினார். " தளபதி விஜய்யுடன் பணியாற்றிதை நான் மிகவும் ரசித்தேன். ஆனால் லோகேஷ் கனகராஜ் மீது எனக்கு கோபம் உள்ளது, ஏனெனில் அவர் 'லியோ'வில் எனக்கு ஒரு பெரிய கேரக்டரை வழங்கவில்லை. அவர் என்னை வீணடித்துவிட்டார்," என்று நடிகர் புன்னகையுடன் கூறி, தனது ஏமாற்றத்தை நுட்பமாக வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மீதான தனது ஆழ்ந்த மரியாதையைப் பற்றி பேசிய சஞ்சய் தத், “ரஜினி சார் மற்றும் கமல் சார், அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவர்கள் எனது சீனியர்கள், நான் அவர்களைப் பார்த்து வளர்ந்தேன். நான் ரஜினி சாருடன் பல படங்களில் பணியாற்றியுள்ளேன், அவர் நான் சந்தித்த மிகவும் பணிவானவர்களில் ஒருவர். அஜித்குமார் சாரையும் நான் நேசிக்கிறேன். நாங்கள் நெருங்கிய நண்பர்கள். நான் ரஜினி சாரின் பல படங்களைப் பார்த்துள்ளேன், 'கூலி' படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று மனம் திறந்து பேசினார்.

Advertisment
Advertisements

மற்றொரு விளம்பர நிகழ்ச்சியின்போது, தனது வரவிருக்கும் படங்களான 'தி ராஜா சாப்' மற்றும் 'துரந்தர்' இரண்டும் டிசம்பர் 5, 2025 அன்று வெளியாவதால் ஏற்படும் பாக்ஸ் ஆபிஸ் மோதல் குறித்து கேட்கப்பட்டபோது, நடிகர், "படங்கள் மோத நான் விரும்பவில்லை, இரு படங்களும் ஒரே நாளில் மோதாது என்று நம்புகிறேன்" என்று பதிலளித்தார். ஒரே நாளில் இரண்டு பெரிய படங்களின் வெளியீடு திரையரங்க வசூலைப் பாதிக்கலாம் என்ற கவலையை இது பிரதிபலிக்கிறது.

இதற்கிடையில், 'ஜோகி' புகழ் பிரேம் இயக்கியுள்ள 'கே.டி - தி டெவில்' திரைப்படம், டீசர் வெளியானதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் துருவா சர்ஜா கதாநாயகனாக நடிக்க, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி, ரீஷ்மா நானையா, ரமேஷ் அரவிந்த், மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் சஞ்சய் தத்தின் பான்-இந்தியா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sanjay Dutt Lokesh Kanagaraj Thalapathy Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: