Advertisment

ஜாக்கி ஜான் போல் வளர 'டேக்வாண்டோ' பயிற்சி கொடுத்தேன்: மகன் குறித்து மனம் திறந்த ஷாருக்கான்!

நான் ஒரு நட்சத்திரமாக இருப்பதால் அதன் காரணமாக அவர்கள் பெற்ற சலுகைகளைப் பற்றி கர்வம் இல்லாமல் தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன் என மகன்கள் குறித்து நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Shah rukh khan Family

குடும்பத்துடன் நடிகர் ஷாருக்கான்

எனது மகன் பிறந்தபோது அவன் ஜாக்கி ஜானை போல் இருப்பதாக உணர்ந்ததால் அவரை போலவே எனது மகனை வளர்க்க ஆசைப்பட்டேன் என்று பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ஷாருக்கான் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisment

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் ஷாருக்கான்,  சமீபத்தில் லோகார்னோ திரைப்பட விழாவில் பார்டோ அல்லா கேரியரா விருது பெற்றிருந்தார். இந்த விருது விழாவின் கலை இயக்குநரான ஜியோனா ஏ. நசாரோவுடன் நேர்காணலில் பங்கேற்ற ஷாருக்கான், தனது குடும்பம் மற்றும் குழந்தைகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொண்டார்.

Read In English: Shah Rukh Khan says wife Gauri brings ‘balance’ to his life, recalls he wanted son Aryan Khan to grow up to be Jackie Chan: ‘Taught him Taekwondo’

மேலும் உரையாடலின் போது, தான் ஒரு பிரபலமான நட்சத்திரமாக இருந்தபோதிலும், எப்படி எளிமையான வாழ்க்கையை வாழ்கிறார் என்பதையும், அதே போன்று தனது குழந்தைகளான ஆர்யன் கான், சுஹானா கான் மற்றும் ஆப்ராம் கான் ஆகியோரிடமும் இப்படி எளிமையை எப்படி சொல்லிக்கொடுக்கிறார் என்பது குறித்தும் பேசியுள்ளார்.

முதலில் தனது குடும்பத்தை பற்றி பேசிய ஷாருக்கான், “எங்கள் குடும்ப வாழ்க்கை மிகவும் சாதாரணமானது. இதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால் நான் ஒரு நட்சத்திரம் என்பதை தாண்டி, எனது வாழ்க்கை அதை விட பெரியது. ஆயிரக்கணக்கான மக்கள் பார்க்கிறார்கள், என்னை நோக்கி மக்கள் கூட்டம் வருகிறார்கள். இதில் நிறைய பைத்தியக்காரத்தனம் உள்ளது.

இது ஒரு ராக்ஸ்டார் போன்று இருப்பது, எனது கவர்ச்சியான, அழகான தோற்றம் இது மக்களை கவர்ந்திருக்கலாம். ஆனால் இது மிகவும் அந்நியமாகவும் வித்தியாசமாகவும் தோன்றலாம் ஆனால் எனது குடும்பம் அப்படி இல்லை. குடும்பம் எளிமையானது, குழந்தைகள் எளிமையானவர்கள், ஒரு தந்தையைப் போல நான் அவர்களுடன் நிறைய நேரம் செலவிடுகிறேன். தனது குழந்தைகள் தாழ்மையாகவும், எளிமையாகவும் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

நான் ஒரு நட்சத்திரமாக இருப்பதால் அதன் காரணமாக அவர்கள் பெற்ற சலுகைகளைப் பற்றி கர்வம் இல்லாமல் தாழ்மையுடன் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். அவர்கள் ஒரு நட்சத்திரத்தின் மகனாக இருக்கிறேன் என்ற நிழலில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த விஷயத்தில், எனது மனைவி இனிமையானவள், அவள் குடும்பத்தில் சமநிலையைக் காக்கிறாள், எனவே, நாங்கள் மிகவும் எளிமையான வாழ்க்கையை நடத்துகிறோம்.

அதேபோல் எனது வேலையில் கவனத்தை செலுத்த அவர் என்னை ஊக்குவித்தார். “நட்சத்திரம் என்பது நான் செய்யும் செயலின் தாக்கம். பணக்காரனாகவும் பிரபலமாகவும் இருப்பது முக்கியப் பகுதியல்ல, இருப்பினும் நன்றாகச் சம்பாதித்து என் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வது அவசியம். எனது பணியின் மூலம் மக்களின் வாழ்க்கை வெளிப்படுத்துவம் அவர்களின் மனதை தொடுவதும் தான் எனக்கு மிகவும் முக்கியமானது என்று ஷாருக்கான் கூறியுள்ளார்.

தொடர்ந்து ஜாக்கி சான் மீதான அவரது அபிமானம் மற்றும் 2011-ல் வெளியான ராஒன் படத்தில் ஜாக்கி ஜான் குறித்து குறிப்புகள் இருந்தது பற்றி கூறிய ஷாருக்கான்,“எனக்கு எல்லா காலத்திலும் பிடித்த நடிகர்களை நான் கணக்கிட வேண்டும் என்றால், மைக்கேல் ஜே ஃபாக்ஸ், அல் பசினோ, ராபர்ட் டி நிரோ ஆகியோருடன் ஜாக்கி சான் ஒருபடி மேலே இருப்பார். நான் அவரை நேசிக்கிறேன். அவர் உடல் ரீதியாக அற்புதமானவர். எதையுமே மிகச் சிறப்பாகச் செய்கிறார், தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துகிறார்.

எனது முதல் மகன் ஆர்யன் பிறந்தபோது, அவர் ஜாக்கி சானைப் போல் இருப்பதாக உணர்ந்தேன். அவர் எனக்கு மிகவும் ஜாக்கி சான்-இஷ். அவர் ஜாக்கி சானாக வளருவார் என்று கருதி டேக்வாண்டோவில் அவருக்கு பயிற்சி அளித்தேன். அவர் அப்படி இருக்க வேண்டும் என்று நான் உண்மையில் விரும்பினேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஜாக்கி சான் ஆர்யனுக்காக ஒரு தொப்பியில் கையெழுத்திட்டார், பல ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 3-4 ஆண்டுகளுக்கு முன்பு, சவுதி அரேபியாவில் அவரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது.

நான் எதிர்பார்த்ததைப் போலவே அவர் இனிமையாகவும் அடக்கமாகவும் இருந்தார். தனது தொழில் வாய்ப்புக்காக புத்திசாலித்தனத்தின் அளவைச் சேர்த்து, "அவர் (ஜாக்கி சான்) இந்த நேர்காணலை எப்போதாவது பார்த்திருந்தால், அவர் கூட்டாக ஒரு சீன உணவகத்தைத் திறப்பதாக உறுதியளித்தார், ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்று கூறியுள்ளார் ஷாருக்கான்.

சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும், ஷாருக்கான் அடுத்ததாக சுஜோய் ராயின் தி கிங் படத்தில் நடித்து வருகிறார். அவரது மகள் சுஹானா கானும் நடிக்கிறார். அவரது மகன் ஆர்யன் கான், ஸ்டார்டம் என்ற அமேசான் பிரைம் வீடியோ தொடரின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இதில் பாபி தியோல், மோனா சிங் ஆகியோருடன் ஷாருக் கான் ஒரு  கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Aryan Khan Shah Rukh Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment