/indian-express-tamil/media/media_files/2025/08/26/govinda-sunitha-2025-08-26-22-03-29.jpg)
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கோவிந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போது பேசுபொருளாகியுள்ளது. அவரது மனைவி சுனிதா அஹுஜா, மும்பையின் பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
இது குறித்து, ஸ்க்ரீன் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த மனு இந்து திருமணச் சட்டம், 1955-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் சுனிதா, கோவிந்தா மீது "விபச்சாரம், கொடுமை, மற்றும் கைவிடுதல்" ஆகிய மூன்று முக்கியக் குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு தொடர்பாக மே 25 அன்று நீதிமன்றம் கோவிந்தாவுக்கு சம்மன் அனுப்பியதாகவும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவருக்கு மீண்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், சுனிதா அஹுஜா, ஜூன் 2025 முதல் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைகள் மற்றும் நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட ஆலோசனை அமர்வுகளில் பங்கேற்று வருகிறார். இது, அவரது முடிவில் உள்ள உறுதியைக் காட்டுகிறது. சுனிதாவின் இந்த முடிவு, அவர் இதற்கு முன்பு அளித்த நேர்காணலில் தெரிவித்த கருத்துகளை மீண்டும் நினைவூட்டுகிறது. ஒரு பிரபலத்தின் மனைவியாக இருப்பதில் உள்ள சவால்கள் குறித்து, அளித்த பேட்டியில், “யாராவது தவறு செய்தால், என்னால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது; கோவிந்தாவை விட எனக்கு மோசமான கோபம் உண்டு” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கணவரின் தொழில்ரீதியான பொறுப்புகளை நிர்வகிப்பதில் ஏற்பட்ட கோப சிக்கல்கள் குறித்தும் பேசிய அவர், “ஒரு நடிகரின் மனைவியாக இருப்பது ஒரு பயனற்ற விஷயம். நீங்கள் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும். ஆனால், நாங்கள் 15 வயதில் காதலித்தோம். இது முதல் பார்வையிலேயே ஏற்பட்ட காதல். அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் பிறகும், நாங்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிவதில்லை” என்று அவர் முன்பு தெரிவித்திருந்தார்.
தற்போது 38 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் இருந்து கோவிந்தா தம்பதி விலக உள்ள நிலையில், இவர்களுக்கு இடையே உள்ள உறவு, பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, கோவிந்தா சினிமாவில் நடித்த ஆரம்ப கட்டத்தில் தனது தாய்மாமா ஆனந்த் சிங் வீட்டில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் அவரது வீட்டில் வசித்திருக்கிறார். தாய்மாமா ஆனந்த் சிங்கின் மனைவியின் தங்கை தான் சுனிதா. இவர் தனது அக்கா வீட்டுக்கு வரும்போது கோவிந்தாவை சந்தித்துள்ளார். முதலில் மோதலில் தொடஙகிய இவர்கள் பிறகு நெருக்கமாக பழக தொடங்கியுள்ளனர்.
இவர்கள் இருவரையும் இணைத்தது நடனம் தான். இருவருக்கும் நடனத்தின் மீது ஆர்வம் அதிகமாக இருந்த நிலையில், சுனிதா தன் வீ்ட்டுக்கு வரும்போது கோவிந்தாவின் மாமா சுனிதா – கோவிந்தா இருவரையும் இணைந்து நடனமாடுமாறு ஊக்குவித்துள்ளார். இப்படி ஆட தொடங்கிய இவர்கள், பின்னாளில் நெருக்கமாகி காதலிக்க தொடங்கியுள்ளனர். வீட்டுக்கு தெரியாமல் கடிதங்கள் மூலம் தங்கள் காதலை வளர்த்து வந்த நிலையி்ல, 1987-ம் ஆண்டு கோவிந்த தனது 24 வயதில் சுனிதாவை திருமணம் செய்துகொண்டார். அப்போது சுனிதாவுக்கு 18 வயது.
கோவிந்தா சினிமாவில் நடிக்க தொடங்கியிருந்த காலம் என்பதால் அவது இமேஜ் பாதிக்கப்படலாம் என்பதால், இருவரும் தங்கள் திருமணத்தை சில ஆண்டுகள் ரகசியமாக வைத்திருந்துள்ளனர். 19 வயதில் சுனிதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. கோவிந்தாவின் தாயார் நிர்மலா தேவியின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், கோவிந்தா – சுனிதா தம்பதி தங்களது 25-வது திருமண ஆண்டு விழாவில், ஒரு பிரமாண்டமான விழாவை ஏற்பாடு செய்து தங்களுக்குள் மீண்டும் ஒருமுறை திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.