Advertisment

புத்த துறவியாக மாறிய பாலிவுட் நடிகை... ஐஸ்வர்யா ராயுடன் அழகிப்போட்டியில் பங்கேற்றவர்!

முதல் படமே பிளாக்பஸ்டர் என்றாலும், பர்கா மதனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர், தனது திறமைக்கான கேரக்டர் வரும் வரை காத்திருந்தார்

author-image
WebDesk
New Update
Barkha Madan

பாலிவுட் நடிகை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஃபெமினி மிஸ் இந்தியா அழகி போட்டியில் பங்கேற்ற நடிகை பர்கா மதன் தற்போது நடிப்பை விட்டுவிட்டு கன்னியாஸ்திரியாக மாறியுள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பாலிவுட்டில், கடந்த 1996 ஆம் ஆண்டில், அக்ஷய் குமார், ரவீனா டாண்டன், ரேகா மற்றும் பலருடன் நடித்த 'கிலாடியோன் கா கிலாடி' மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பர்கா மதன். இந்த படத்தில் அவருக்கு முக்கிய கேரக்டர் இல்லை என்றாலும், அவர் நடித்த ஜேன் என்ற கேரகட்டரில் சித்தரிப்பு பலரையும் கவர்ந்தது. இந்த படம் 1996-ம் ஆண்டில் அதிக வசூல் செய்த 5 வது திரைப்படம் என்ற சாதனைக்கு இந்த கேரக்டரும் ஒரு முக்கிய காரணம்.  

முதல் படமே பிளாக்பஸ்டர் என்றாலும், பர்கா மதனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அவர், தனது திறமைக்கான கேரக்டர் வரும் வரை காத்திருந்தார். அப்போது தான் புகழ் பெற்ற இயக்குனர் ராம் கோபால் வர்மா தனது 'பூட்' படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார். பர்கா மதனின் விடாமுயற்சி இந்த படத்தில் பலனளித்தது. படமும் வெற்றியடைந்த நிலையில், அவரின் கேரக்டரும் பேசப்பட்டது.  

இதன் காரணமாக பல புகழ்பெற்ற இயக்குனர்கள் பர்கா மதனை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முயற்சித்தனர். அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த பர்கா மதன் 1994 இல் ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டியில் பங்கேற்றார் என்பது பலருக்குத் தெரியாத ஒரு உண்மை. இந்த சுஷ்மிதா சென் வெற்றியாளராகவும், ஐஸ்வர்யா ராய் முதல் ரன்னர்-அப் ஆகவும் இருந்தபோது, பர்கா மிஸ் இந்தியா டூரிஸம் என்ற பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டார்.

மாடலிங் துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு, இந்தி சினிமாவில் களமிறங்கிய பர்கா மதன், 2012 ஆம் ஆண்டில், நடிப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவரது  நடிப்புத் திறமையால் பல திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றதாகக் கூறப்பட்ட போதிலும், அவர் தனது கவனத்தை வேறு பாதையில் திருப்பியதால் நடிப்பில் இருந்து விலகினார். இதனிடையே லாமா ஜோபா ரின்போச்சியின் வழிகாட்டுதலின் கீழ், பர்கா மதன் கர்நாடகாவில் உள்ள செரா ஜெய் மடாலயத்தின் ஹர்டாங் காங்ட்சனில் புத்த துறவியானார். தன் பெயரை வென் என்று மாற்றிக் கொண்ட அவர், கியால்டன் சாம்டன் தனது புதிய ஆன்மீக பயணத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார்.

பர்கா மதன் நடிப்பை விட்டுவிட்டு புத்த கன்னியாஸ்திரியாக மாறுவதற்கான தனது முடிவை அவரது பெற்றோர் முழு மனதுடன் ஆதரித்ததாக வெளிப்படுத்தினார். தற்போது, அவர் திபெத்தின் செரா ஜெ மடாலயத்தில் அமைதியான வாழ்க்கையை நடத்துகிறார், எப்போதாவது அங்கிருந்து படங்களையும் வீடியோக்களையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொள்கிறார். ஹிந்தித் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருந்து திபெத்தில் புத்த கன்னியாஸ்திரியாக அமைதியான வாழ்க்கையைத் தழுவிய பர்காவின் பயணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment