பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன் தற்போது நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் நிலையில், அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனேவின் மகள் என்ற அடையாளத்துடன் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் தீபிகா படுகோன்.
2006-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஐஸ்வர்யா என்ற படமே இவரின் அறிமுகப்படமாகும். இந்த படத்தில் உபேந்திரா நாயகனாக நடித்திருந்தார்.
அதன்பிறகு இந்தி சினிமாவில் அறிமுகமான தீபிகா, பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
ஷாருக்கான், ரன்வீர் சிங், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த தீபிகா படுகோன், சில படங்களில் கேமியோ ரோல்களில் நடித்துள்ளார்.
2014-ம் ஆண்டு தமிழில் மோஷன் கேப்டசர் படமாக வெளியான ரஜினிகாந்தின் கோச்சடையன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா நடித்திருந்தார்.
டிரிபிள் எக்ஸ் படத்தில் மூலம் அமெரிக்க படத்தில் நடித்த தீபிகா, சமீபத்தில் தெலுங்கில் வெளியான கல்கி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
கடந்த 2018-ம் ஆண்டு சக நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோன் தற்போது நிறைமாத கர்ப்பினியாக இருக்கிறார்.
அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடும் தீபிகா, கர்ப்ப காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்று பெண்களுக்கு டிப்ஸ் கொடுத்து வருகிறார்.
தற்போது கர்ப்ப காலத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ள நடிகை தீபிகா இந்த புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.