/indian-express-tamil/media/media_files/KoXwvb6MFy0R0C8rOjuF.jpg)
நடிகை ஹினா கான்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தான் அதை எதிர்த்து போராடி வருவதாகவும் தற்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ள பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான், தன்னைப் பற்றி பரவி வரும் விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
திரையுலகில் நடிகைகள், புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி வருவது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட, இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள், பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் நடிகை மனிஷா கொய்ராலா, சோனாலி பிந்த்தேல, லிஸா ரே உள்ளிட்ட பல நடிகைகள் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி தற்போது சிகிச்சையின் மூலம் அதில் இருந்து மீண்டு வந்துள்ளனர்.
இதனிடையே சமீபத்தில் நடிகை கர்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நடிகை பூனம் பாண்டே இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அடுத்த நாளே இது பொய்யான தகவல் என்று பூனம் பாண்டே விளக்கம் அளித்திருந்தார். அந்த வகையில் தற்போது நடிகை ஹினா கான், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தன்னை பற்றி வெளியாகியுள்ள வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட் சின்னத்திரையின் முன்னணி நடிகையாக இருக்கும் ஹினா கான், நாகினி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் பிக்பாஸ் நிகழச்சியில் பங்கேற்ற இவர், தற்போது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் உயிருக்கே ஆபத்து என்றும், அவர் இறந்துவிட்டார் என்றும் கடந்த சில தனிங்களாக பல்வேறு செய்திகள் பரவி வருகிறது. இந்த தகவல்கள் குறித்து தற்போது ஹினா கான் விளக்கம் அளித்துள்ளர்.
இது குறித்து அவர் கூறுகையில், என்னை பற்றி வரும் வதந்திகளை கேள்விப்பட்டேன். இதில் சில உண்மைகளும் இருக்கிறது. நான் மார்கப புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஸ்டேஜ் 3-ல் இருக்கிறேன். ஆனால் வதந்திகள் பரவுவது போல், என் உடலில் எந்த பாதிப்பும் இல்லை நான் நலமாகவே இருக்கிறேன். கேன்சரை எதிர்த்து போராடி வருகிறேன். ரசிகர்களுக்காக தொடர்ந்து நடித்துக்கொண்டே இருப்பேன்.
என் சிகிச்சைகள் முடித்து முழுமையாக குணமடைய வேண்டும் என்று என் ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். எனக்கு ஏற்பட்ட மார்கப புற்றுநோயால் தான் துவண்டுவிடவில்லை நலமாகவே இருக்கிறேன் என்று நடிகை ஹினா கான் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.