Advertisment

பாப் பாடகி ரிஹானாவுடன் ஜான்வி கபூர் டான்ஸ்... களைகட்டும் அம்பானி வீட்டு திருமணம் : வைரல் வீடியோ

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் வெளிநாட்டு பாப் பாடகியான ரிஹானா கச்சேரி நடைபெறது.

author-image
WebDesk
New Update
Janhvi Kapoor Dance

ஜான்வி கபூர் - பாப் பாடகி ரிஹானா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் வெளிநாட்டு பாப் பாடகரான ரிஹானா நடிகை ஜான்வி கபூருடன் இணைந்து நடனமாடிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளையமகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்டங்கள் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. உலகமே வியக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள இந்த திருமண கொண்டாட்டங்களில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

இந்த வகையில், ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில் வெளிநாட்டு பாப் பாடகியான ரிஹானா கச்சேரி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு குஜராத்தின் ஜாம் நகருக்கு தனது குழுக்களுடன் வந்து இறங்கிய பாப் பாடகி ரிஹானா, திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்திற்கு சென்றார்.

இது தொடர்பான வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவியது. இதனிடையே திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நேற்று (மார்க் 1) இரவு தொடங்கியது. ஜாம் நகரில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் உலக பணக்காரர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், முன்னணி தொழிலதிபர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாப் பாடகியான ரிஹானாவின் கச்சேரியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக ரிஹானாவுக்கு 52 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி நேற்று இரவு தொடங்கிய இந்த திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சியில், பாப் பாடகி ரிஹானா பாடல் பாட, இவருடன் இணைந்து ஸ்ரீதேவியின் மகன் ஜான்வி கபூர் நடனமாடியுள்ளார். இவர்கள்ன இருவரும் இணைந்து ஆடிய நடனம் பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்த நடனம் தொடர்பான வீடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வி ஃபவுண்ட் லவ் (We Found Love) உட்பட தான் பாடிய பெரிய ஹிட் பாடல்கள் பலவற்றை பாடிய அசத்திய ரிஹானா, ஆனந்த் மற்றும் ராதிகா அவர்களின் திருமணத்திற்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பாலிவுட் சினிமாவுக்கு ஏற்றபடி, ரிஹானாவுக்கு ஜான்வி நடனம் கற்றுக் கொடுப்பதையும், ரிஹானா அதை பின்பற்றி ஆடியதையும் பார்க்க முடிந்தத, இந்த வீடியோவை ஜான்வி தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், இந்த வார தொடக்கத்தில் ஜான்வி ஜாம்நகருக்கு வந்தடைந்தார். மேலும்  ஷாருக், சல்மான் கான், கியாரா அத்வானி, சைஃப் அலி கான், கரீனா கபூர் கான், மாதுரி தீட்சித், வருண் தவான், அனில் கபூர், சாரா அலி கான், இப்ராகிம் அலி கான், அனன்யா பாண்டே மற்றும் ஆதித்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர்.

ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் ஜாம்நகரில் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக தினசரி ஒரு சில விமான தரையிறங்களே பயன்படுத்தப்பட்டு வந்த ஜாம்நகர் விமான நிலையம், மார்ச் 1 ஆம் தேதி சுமார் 50 தரையிறக்கங்களைக் கண்டுள்ளது.. இந்த விமான நிலையம் முழுவதும் ரிலையன்ஸால் அலங்கரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Janhvi Kapoor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment