பாலிவுட் சினிமாவின் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர், திருப்பதி மலையேற்ற படிக்கட்டில் நடந்தே சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இந்தி சினிமாவின் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் இவர், பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், கடநத ஆண்டு வெளியான தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாக ஜான்வி கபூர் அடுத்து, ராம்சரன் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். பல இந்தி படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
அதேபோல் விரைவில், தமிழ் சினிமாவிலும் ஜான்வி கபூர் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவ்வப்போது அவர் சென்னையில் உள்ள தனது அம்மா ஸ்ரீதேவியின் பழைய வீட்டுக்கு விசிட் அடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜான்வி கபூர், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஜான்வி கபூர் தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
2024-ம் ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் திருப்பதி ஏழுமலையார் கோவிலில் தனது பிறந்த நாளை கொண்டாடிய ஜான்வி கபூர், அவரது காதலன் ஷிகர் பஹாரியா மற்றும் நண்பன் ஒரி ஆகியோருடன் கோவிலில் இருந்தார். இது தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வெளியானது. ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட ஜான்வி, அவ்வப்போர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன், 3550 படிக்கட்டுகள் நடந்தே சென்று தரிசனம் செய்துள்ளார்.
இந்த திருப்பதி சுற்றுப்பயணத்தில், ஷிகர் பஹாரியா மற்றும் அவரது தாயார் ஸ்ம்ருதி பஹாரியாவும் அவருடன் சாமி தரிசனம் செய்தனர். இந்த பயணத்தில், ஜான்வி கபூர் பாரம்பரிய உடையான பாவாடை தாவணியில், வந்திருந்தார். தனது தாய் ஸ்ரீதேவி மரணத்திற்கு பின், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் உள்ள ஜான்வி கபூர் அவ்வப்போது கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“