தென்னிந்திய சினிமா மட்டும்ல்லாது பாலிவுட் சினிமாவிலும் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
Advertisment
இதில் முதல் பெண் ஜான்வி கபூர். 2018-ம் ஆண்டு இந்தியில் வெளியானி தடாக் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான ஜான்வி கபூர், அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரீஸ் என்ற படத்தில் நடித்தார்.
Advertisment
Advertisements
தொடர்ந்து, கன்ஜன் சக்சேனா, ராஹீ, குட்ல் ஜெர்ரி, மிலி ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், பவால், மிஸ்டர் அன் மிஸஸ் மாஹி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இவரை தெலுங்கு படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்த நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியள்ளது. ஆனால் விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசைப்படும் ஜான்வி அவரின் நானும் ரவுடிதான் படத்தை பலமுறை பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் சமீபத்தில் விஜய் சேதுபதியிடம் தனக்கு உங்களுடன் நடிக்க சான்ஸ் வேண்டும் என்று கேட்டதாகவும் தகவல் வெளியானது. படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் சமூக வலைதளங்களில் ஜான்வி ஆக்டீவாக இருந்து வருகிறார்.
இதில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த வகையில், தற்போது மாலத்தீவு சென்றுள்ள ஜான்வி அங்கிருந்து எடுத்த புகைப்டங்களை வெளியிட்டள்ளார்.
இதில் இவர் பீச் ஓரம் கிளாமர் உடையில் அமர்ந்துள்ளபடி வெளியாகியுள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil