பாலிவுட் சினிமாவின் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர் தற்போது வெளியிட்டுள்ள வித்தியாசமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
80-90-களில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவருடனும் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
பாலிவுட் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீதேவி பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.
ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதிக்கு ஜான்வி –மற்றும் குஷி என்ற இரு மகள்கள் உள்ளது. இதில் ஜான்வி கபூர் இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஜான்வி கபூர் முன்னணி இளம் நடிகையாக வலம் வருகிறார். பல படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
ஜான்வி கபூர் விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக தேவாரா படத்தில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் நடிக்கும் தமிழ் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் விரைவில் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாவார் என்று கூறப்படுகிறது.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜான்வி கபூர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் தற்போது இவர் பாரம்பரிய உடையான சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சேலையின் மதிப்பு 1.15 லட்சம் என்றும், இதற்கான பிளவுஸ் விலை 42000 என்றும் தகவல் வெளியானது. இதன் மூலம் இந்த உடையின் மொத்த விலை 1.60 லட்சம் என்று கூறப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.