Advertisment

திருப்பதி கோவிலில் ஜான்வி கபூர் : படிகளில் முட்டிப்போட்டு வேண்டுதல்

எனக்கு புனிதமான கோவிலுடன் ஆன்மீக தொடர்பு உள்ளது, நான் கிட்டத்தட்ட 50 முறை மலைக் கோயிலுக்குச் சென்றிருக்கிறேன் என ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Janvi Kapoor tirupathi

ஜான்வி கபூர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாலிவுட் சினிமாவின் முன்னணி இளம் நடிகையாக ஜான்வி கபூர், திருப்பதி மலையேற்ற படிக்கட்டில் முட்டிப்போட்டுக்கொண்டு வேண்டுதல் நிறைவேற்றிய வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இந்தி சினிமாவின் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் இவர், பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேபோல் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜான்வி கபூர், அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

மார்ச் மாத தொடக்கத்தில் திருப்பதி ஏழுமலையார் கோவிலில் தனது பிறந்த நாளை கொண்டாடிய ஜான்வி கபூர், அவரது காதலன் என்று வதந்தி பரப்பப்பட்டு வரும் ஷிகர் பஹாரியா மற்றும் நண்பன் ஒரி ஆகியோருடன் கோவிலில் இருந்தார். இது தொடர்பான வீடியோ பதிவில், ஜான்வி வேண்டுதலுக்காக திருப்பதி மலையேறும் படிக்கட்டில் முட்டிப்போட்டு நடந்து சென்றுள்ளார். மேலும் தான் பாரம்பரியத்தை பின்பற்றுவதற்கான காரணம் குறித்து ஓரியுடன் விளக்கியுள்ளார்.

மேலும்"எனக்கு புனிதமான கோவிலுடன் ஆன்மீக தொடர்பு உள்ளது, நான் கிட்டத்தட்ட 50 முறை மலைக் கோயிலுக்குச் சென்றிருக்கிறேன், திருப்பதி பாலாஜி எனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக நான் முழங்காலில் படிகளில் ஏறினேன்" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஷிகர் பஹாரியாவுடன் அடிக்கடி கோவிலுக்கு வரும் ஜான்வி கபூர், கடந்த சில மாதங்களில் அவர் தனது சகோதரி குஷி கபூர் மற்றும் அவர்களது தந்தை போனி கபூர் ஆகியோருடன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், ஜான்வி கபூர் தனது தந்தை போனி கபூருடன் புதன்கிழமை ஹைதராபாத்தில் உள்ள டோலிவுட் ஸ்டார் ஹீரோ ராம் சரண் இல்லத்திற்கு சென்றார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை ராம்சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதில் முதல் புகைப்படத்தில், படத்தின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மற்றவர்களுடன் ஜான்வி மற்றும் போனி கபூருடன் ராம்சரண் படுக்கையில் அமர்ந்திருந்தார். அதன்பிறகு ஜான்வியும் ராம் சரணும் வெளியில் அரட்டை அடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்த அவர், ஆர்.சி.16 பத்திற்காக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதுவரை பாலிவுட் சினிமாவில் நாயகியாக நடித்து வந்த ஜான்வி கபூர் முதல் முறையாக ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் தேவாரா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அடுத்து ராம்சரண் நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். முன்னதாக வெளியீட்டு பூஜையிலும் பங்கேற்றார். இப்படத்தின் விழாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மார்ச் 6 அன்று, ஜான்வி கபூரின் பிறந்தநாளில், அவர் தனது இரண்டாவது தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Janhvi Kapoor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment