scorecardresearch

சர்ச்சில் என்னை நுழைய விடல; கோயிலுக்கு மட்டும் இப்படி வரலாமா? கொதித்த பிரபல நடிகை

எமர்ஜென்சி என்ற படத்தை தயாரித்து இயக்கி வரும் கங்கனா இந்த படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்து வருகிறார்.

Kangana Ranaut
கங்கனா ரனாவத்

அறைகுறை ஆடைகள் அணிந்துகொண்டு கோவிலுக்கு வருவதா என்று பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கங்கனா ரனாவத். பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இவர், பல வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் தலைவி படத்தில் நடித்திருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் கங்கனா ஜெயலலிதா வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது எமர்ஜென்சி என்ற படத்தை தயாரித்து இயக்கி வரும் கங்கனா இந்த படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் சந்திரமுகி 2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடும் பதிவுகள் கவனம் பெற்று வருகிறது.

இதில் சக நடிகர் நடிகைகள் குறித்து சர்ச்சையான பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் கங்கனா சமீபத்தில் ஓரினசேர்க்கை திருமணத்திற்கு ஆதரவாகவும், தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ததற்கு எதிராகவும் தனது கருத்துக்களை பதிவு செய்திருந்தார். அதேபோல் தொடர்ந்து சர்ச்சையாக கருத்துக்களை பதிவிடுவதால், ட்விட்டர் நிர்வாகம் அவரது ட்விட்டர் கணக்கை முடக்கியது. ஆனாலும் கங்கனா அவ்வப்போது தனது கருத்துக்களை ஸ்ராங்காக வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது கோவில்கள் குறித்து கங்கனா வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவிலுக்கு வரும் இளம்பெண் அறைகுறை ஆடையுடன் வருவது குறித்து நிகி என்ற பெண் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கோவிலுக்கு வரும் பெண்கள் நைட் க்ளப்புக்கு வருவது போல் உடையணிந்து வருவதாக கூறியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.

இந்த பதிவை டேக் செய்த கங்கனா, இந்த மேற்கிந்திய ஆடைகள் வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்டு  அறிமுகப்படுத்தப்பட்டவை. நான் ஒருமுறை வாடிக்கனுக்கு ஷார்ட்ஸ் டீசர்ட் அணிந்து சென்றேன். அப்போது அந்த வளாகத்தில் கூட என்னை அனுமதிக்கவில்லை. பிறகு ஹோட்டலுக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு மீண்டும் வந்து உள்ளே சென்றேன். இரவு உடைகளை சாதாரணமாக அணியும் இவர்கள், சோம்பேறிகள் தவிர வேறு யாரும் இல்லை. இத்தகைய முட்டாள்களுக்கு கடுமையாக விதிகளை வகுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Bollywood actress kangana ranaut slams girls warning shorts to temple