/indian-express-tamil/media/media_files/czVBvieq0L0hubDR7xwn.jpg)
விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப்
விஜய் சேதுபதி நடித்துள்ள இந்தி திரைப்படமாக ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள இந்த படத்தில் கத்ரீனா கைஃப் நாயகியாக நடித்துள்ள நிலையில், படம் வரும் ஜனவரி 12,தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே நேற்று (ஜனவரி 4) நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை கத்ரீனாவும், நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்து பாடல்களை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில், விஜய் சேதுபதியை முதன்முதலில் சந்தித்ததை நினைவு கூர்ந்த கத்ரீனா கைஃப்,, விஜய் சேதுபதி தான் கற்பனை செய்ததில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருப்பதாக கூறினார்.
மேலும், அவரைப் பற்றிய அபிப்ராயம் மாறியதாகவும், அவரின் 'விடுதலை' படம் தன்னைக் கவர்ந்ததாகவும் கூறினார். விடுதலை படம் காரணமாக வெள்ளை முடி மற்றும் வெள்ளை தாடியுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால், தான் நினைத்ததை விட சற்று இளமையாக இருந்தார். அவரை முதன்முறையாக வித்தியாசமான தோற்றத்தில் பார்ப்பது வேடிக்கையாக இருந்தது. அவரை சந்தித்த பிறகு தனது முதல் வார்த்தைகள், "ஓ, அது வித்தியாசமான தோற்றம்" என்று கூறியதாக கத்ரீனா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர். விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் ஸ்ரீராம் ராகவனுடன் பணிபுரிவதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். இப்படம் த்ரில்லர் பாணியில் இருக்கும் என்று கூறியுள்ளார். படத்தின் மற்ற நடிகர்களில் ராதிகா ஆப்தே, அஷ்வினி கலாசேகர், சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன் மற்றும் ஹிந்தியில் டின்னு ஆனந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் தமிழ் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கெவின் ஜெய் பாபு, ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் ஜனவரி 12, 2024 அன்று வெளியாகிறது. படத்தின் கதை ஒன்றுதான் என்றாலும், தமிழ் மற்றும் இந்தி பதிப்புகளுக்கான நடிகர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.