மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 2-வது மகளாக குஷி கபூர் தனது முதல் பட பிரீமியர் ஷோவுக்கு தனது தாயின் உடை அணிந்து வந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பிறந்து இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. கமல் ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் தொடங்கிய இந்தி சினிமாவிலும் தனக்கென தனி இடத்தை பெற்றிருந்த ஸ்ரீதேவி, தமிழ் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
இந்தி பட உலகிற்கு சென்ற ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஜான்வி மற்றும் குஷி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகி இருந்த ஸ்ரீதேவி 2015-ம் ஆண்டு இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டு மாம் என்ற படத்தில் நடித்திருந்த ஸ்ரீதேவி 2019-ம் ஆண்டு, உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்த நிலையில், அங்கேயே மரணமடைந்தார்.
/indian-express-tamil/media/media_files/Nyr4zjw3FD2AmgzeBogB.jpg)
இதனிடையே இந்தி சினிமாவில் அறிமுகமான ஸ்ரீதேவி மூத்தமகள் ஜான்வி கபூர் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதே சமயம் ஜான்வி கபூர் விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என்று கூறப்படும் நிலையில், ஸ்ரீதேவியின் கணவர் அஜித்தின் வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தார். தற்போது ஸ்ரீதேவி இல்லை என்றாலும், அவ்வப்போது அவரது மகள்கள் ஸ்ரீதேவியின் சென்னை வீட்டில் இருந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் இந்த வீட்டில் இருப்பது நான் ஸ்ரீதேவியுடன் இருப்பது போல் உணர்வதாக போனி கபூரும் தெரிவித்திருந்தார். இதனிடையே ஸ்ரீதேவியின் 2-வது மகள் குஷி கபூர் தற்போது பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார். அவர் நடித்துள்ள முதல் படமாக தி அர்ச்சீவ் (the Archies) என்ற படத்தின் பிரீமியர் ஷோ சமீபத்தில் திரையிடப்பட்டது. திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் குஷி கபூர் தனது அம்மாவின் உடையை அணிந்து வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஸ்ரீதேவியின் உடையில் வந்த குஷி கபூரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“