Advertisment

Malaika Arora's Father Death: பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா தந்தை தற்கொலை: போலீசார் விசாரணை!

Malaika Arora's Father Anil Arora Death: பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவின் தந்தை அனில் அரோரா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
Malaikka Arora

Malaika Arora's Father Anil Arora Death

Malaika Arora's Father Anil Arora Death: பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான மலைக்கா அரோராவின் தந்தை அனில் அரோரா, இன்று காலை மும்பையின் பாந்த்ராவில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Read In English: Malaika Arora’s father Anil Arora dies by suicide, ex-husband Arbaaz Khan and Arjun Kapoor reach her residence

பாலிவுட் சினிமாவில், நடிகை, டான்சர், தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் வலம் வரும் மலைக்கா அரோரா சின்னத்திரையிலும் முக்கிய பிரபலமாக இருக்கிறார். இவரது தந்தை அனில் அரோரா. இவர் இன்று (செப்டம்பர் 11) காலை 10.30 மணியளவில் மும்பை பந்தாரவில் உள்ள அவர்களது குடும்ப இல்லமான ஆயிஷா மேனரின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மலைக்கா அரோராவின் முன்னாள் கணவர் அர்பாஸ் கான் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் அவரது வீட்டிற்கு விரைந்துள்ளனர். தற்போது அனில் அரோராவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலைக்காவுக்கு நெருக்கமானவர்கள் இது ஒரு விபத்து என்று கூறி வருவதாக தகவல் வெளியஙாகியுள்ளது.

“இது ஒரு விபத்து. காவல்துறையின் அறிக்கை கிடைத்தவுடன் அதை வெளியிடுவோம்” என்று அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் (indianexpress.com) தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்தபோது மலைக்கா அரோரா புனேவில் இருந்ததாகவும், தனது தந்தையின் மரணம் குறித்து தகவல் தெரிந்து உடனடியாக அவர் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது பெற்றோரின் வீட்டுக்கு வந்துள்ளார் என்று விசாரணையில் தெரிவந்துள்ளது. மலைக்காவின் முன்னாள் கணவர் அர்பாஸ் கானின் பெற்றோர் சலீம் கான்-சல்மா கான் மற்றும் அவரது சகோதரர் சோஹைல் கான் ஆகியோரும் வீட்டிற்கு வந்தனர்.

தற்போது மலைக்காவின் பார்ட்னரான அர்ஜுன் கபூரும் அனில் அரோராவின் வீட்டில் இருந்து வருகிறார். மலைக்கா மற்றும் அர்பாஸின் மகன் அர்ஹான் கானும் பாந்த்ராவில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். மலைக்காவிற்கு 11 வயதாக இருக்கும்போது அவரது பெற்றோர்களான ஜாய்ஸ் பாலிகார்ப் மற்றும் அனில் அரோரா பிரிந்தனர். சமீபத்தில் ஃபிலிம்பேருக்கு அளித்த பேட்டியில்,மலைக்கா அரோரா தனது பெற்றோருடனான தனது உறவைப் பற்றி மனம் திறந்து பேசினார்.

விவாரத்து ஆன நேரத்தில் எங்கள் தாய் எங்களை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டார். அந்த ஆரம்ப ஆண்டுகளை நினைத்துப் பார்க்கையில், “எனக்கு அருமையான குழந்தைப் பருவம் இருந்தது, ஆனால் அது எளிதானதாக இல்லை. உண்மையில், பின்னோக்கிப் பார்த்தால், அதை விவரிக்க நான் பயன்படுத்த வார்த்தைகள் இல்லை. ஆனால் கடினமான நேரங்கள் முக்கியமான பாடங்களையும் கற்பிக்கின்றன என்று கூறியிருந்தார்.

மேலும்“எனது பெற்றோரின் பிரிவு ஒரு புதிய மற்றும் தனித்துவமான லென்ஸ் மூலம் என் தாயை கவனிக்க அனுமதித்தது. நான் ஒரு ராக்-நிலையான வேலை நெறிமுறையையும், கடுமையான சுதந்திரமாக மாறுவதற்கு எடுக்கும் அனைத்தையும் செய்ய ஒவ்வொரு காலையிலும் சீக்கிரமாக எழுவதால் கிடைக்கும் மதிப்பினை புரிந்துகொண்டேன். அந்த ஆரம்ப பாடங்கள் என் வாழ்க்கை மற்றும் தொழில்முறை பயணத்தின் மூலக்கற்கள். நான் இன்னும் சுதந்திரமாக இருக்கிறேன்; எனது சுதந்திரத்தை மதிக்கிறேன் மற்றும் எனது விருப்பப்படி வாழ்கிறேன்,” என்று கூறியிருந்தார்.

மலைக்காவின் தந்தை பஞ்சாப்பைச் சேர்ந்தவர், அவரது தாயார் ஜாய்ஸ் ஒரு மலையாளி கிறிஸ்தவர். இவர் முன்பு வணிக கடற்படையில் பணிபுரிந்தார். அனில் அரோரா கடந்த ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மலைக்காவும், அவரது தாயும் அவரைப் பார்க்கச் சென்றதைக் காண முடிந்தது, ஆனால் அனில் எதற்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற காரணம் தெரியவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment