/indian-express-tamil/media/media_files/8jwXAXLCP1bSfCkHQ8Au.jpg)
பூனம் பாண்டே
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையும், சமூகவலைதள பிரபலமுமான பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக நேற்று தகவல் வெளியான நிலையில், தற்போது தான் உயிருடன் இருப்பதாக பூனம் பாண்டே வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள பூனம் பாண்டே. ஏராளமான ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த பதிவில், இது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "இன்று காலை எங்களுக்கு கடினமான ஒன்று. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவளுடன் தொடர்பு கொண்ட ஒவ்வொரு உயிரினமும் தூய அன்புடனும் கருணையுடனும் சந்தித்தன. துக்கத்தின் இந்த நேரத்தில், நாங்கள் பகிர்ந்து கொண்ட அனைத்திற்கும் அவளை அன்புடன் நினைவுகூறுவோம் என்று பதிவிட்டிருந்னர்.
பூனம் பாண்டேவின் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது உண்மையான செய்தியா என்று ஒரு தரப்பினரும், பூனம் பாண்டே அக்கவுண்டை ஹேக் செய்துவிட்டார்களா என்று ஒரு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இந்த தகவல் வெளியாகி ஒரு நாள் கழித்து, இன்று தான் சாகவில்லை உயிருடன் தான் இருக்கிறேன் என்று நடிகை பூனம் பாண்டே விளக்கம் அளித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் நான் உயிரிழக்கவில்லை. நான் உயிருடன் தான் இருக்கிறேன். ஏராளமான பெண்கள் துரதிஷ்டவசமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கிறார்கள். இது முற்றிலும் தடுக்கப்படக்கூடிய ஒரு நோய். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த நோயால் யாரும் இனிமேல் சாக கூடாது என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த கண்ணீருக்காகவும், நான் காயப்படுத்தியவர்களுக்காவும் வருந்துகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார். பூனம் பாண்டேவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். சர்ச்சைக்குரிய வார்த்தைகளை கூறி பிரபலமான பூனம் பாண்டே, 2011-ம் இந்தியா உலககோப்பை வென்றால் தான் நிர்வணமாக நடந்து வருவேன் என்று கூறியிருந்தார். ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்றாலும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றபோது நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.